Home /News /sports /

உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது இந்தியா

போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடும் இந்திய வீரர்கள்

போட்டியில் ஆக்ரோஷமாக விளையாடும் இந்திய வீரர்கள்

ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ரிவியூ மூலம் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் மன்தீப் கோல் அடித்தார்.

  • News18
  • Last Updated :
    உலகக் கோப்பை ஹாக்கி தொடரை இந்திய அணி வெற்றியுடன் தொடங்கியது. புவனேஸ்வரில் இன்று நடைபெற்ற போட்டியில் இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

    உலகக் கோப்பை ஹாக்கி போட்டிகள் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இன்று தொடங்கின. கலிங்கா மைதானத்தில் நடைபெற்ற 2-வது போட்டியில் இந்தியா மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் களம் கண்ட இந்தியா ஆரம்பம் முதலே தாக்குதல் ஆட்டத்தை தொடர்ந்தது. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் ரிவியூ மூலம் கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை பயன்படுத்தி இந்தியாவின் மன்தீப் கோல் அடித்தார். தொடர்ந்து 13-வது நிமிடத்தில், வருண் கடத்தி தந்த பந்தை அக்ஷய்தீப் கோலாக மாற்றி இந்தியாவின் கோல் எண்ணிக்கையை இரண்டாக அதிகரித்தார்.

    இரண்டாவது கால்பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியடைந்தன. 3-வது கால்பாதி ஆட்டத்தின் இறுதியில் இந்தியாவின் சிம்ரன்ஜித் மேலும் ஒரு கோல் அடித்தார். இதன்மூலம், இந்தியா 5-0 என்ற கோல் கணக்கில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தியது.

    Also watch

    Published by:DS Gopinath
    First published:

    Tags: World Cup Hockey

    அடுத்த செய்தி