Home /News /sports /

உலக செஸ் தினம் 2022 : வரலாறு, முக்கியத்துவம் ,விளையாட்டை பற்றிய சில குறிப்புகள்!

உலக செஸ் தினம் 2022 : வரலாறு, முக்கியத்துவம் ,விளையாட்டை பற்றிய சில குறிப்புகள்!

உலக செஸ் தினம் 2022

உலக செஸ் தினம் 2022

World Chess Day 2022 : சதுரங்கம் என்பது அறிவுசார்ந்த மற்றும் நம் மூளையின் செயல் திறன்களை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான விளையாட்டாகும்.

  ஒவ்வொரு வருடமும் ஜூலை 20 ம் தேதி உலக சதுரங்க தினத்தை உலக நாடுகள் அனைத்தும் கொண்டாடி வருகிறது. செஸ் போர்டு கேம் வீரர்களான விஸ்வநாதன் ஆனந்த், ரமேஷ்பாபு பிரக்ஞானந்தா, மேக்னஸ் கார்ல்சன் போன்றவர்களுக்கு இந்த நாள் மிகவும் முக்கியமான நாளாகவும் அமைகிறது. இவர்களை பெருமைப்படுத்தும் நாளாகவும் இந்தநாள் உள்ளது என்றும் கூறலாம்.

  கீழே, உலக சதுரங்க தினத்தின் வரலாறு மற்றும் முக்கியத்துவத்தைப் பார்த்து, விளையாட்டின் சில பிரபலமான குறிப்புகளை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

  வரலாறு

  ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை (UNGA) டிசம்பர் 12, 2019 அன்று உலக சதுரங்க தினத்தை அங்கீகரித்ததோடு, 1924 ம் ஆண்டு ஜூலை 20 ஆம் தேதியை உலக சதுரங்க தினமாக தேர்ந்தெடுத்தது. மேலும் பாரிஸில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு (FIDE) நிறுவப்பட்டது. இந்த கூட்டமைப்பு (FIDE), 150 க்கும் மேற்பட்ட சதுரங்க கூட்டமைப்புகளை அதன் உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 1966ல் முதல் உலக சதுரங்க தினம் கொண்டாடப்பட்டது.

  நவீன சர்வதேச செஸ் என்பது இரண்டு சதுரங்கக் காய்களைப் பயன்படுத்தும் வீரர்களை உள்ளடக்கிய ஒரு புத்திசாலித்தனமான விளையாட்டாகும். இதில் சிப்பாய்கள், பிஷப், ராஜா மற்றும் ராணி ரூக் ஆகியோரின் ஒருவருக்கொருவர் எதிரான நகர்வுகளை கொண்டே வெற்றியின் இலக்கு சாத்தியமாகிறது. கிபி 1000 ம் நூற்றாண்டில் ஐரோப்பா முழுவதும் இந்த விளையாட்டு பிரபலமானது. 4 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இருந்து கிபி 6 ஆம் நூற்றாண்டு வரையிலான இந்தியாவில் குப்த பேரரசின் ஆட்சியில் நான்கு வீரர்களை கொண்ட பழங்கால வியூக விளையாட்டான சதுரங்காவிலிருந்து இந்த சதுரங்கம் விளையாட்டு உருவானது.

  ALSO READ | தென் ஆப்ரிக்கா டி20 லீக்.. அணியை வாங்கும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

  சதுரங்க விளையாட்டு பண்டைய காலத்தில் பெர்சியாவில் தொடங்கி, அரபு பகுதிகள், பைசான்டியம் மற்றும் உலகின் பிற பகுதிகளுக்கு பரவியது. சதுரங்கா என்ற பெயர் கொஞ்சம் கொஞ்சமாக மாறி இறுதியில் சத்ரஞ்சா என்றானது. தற்போது நம் நாட்டில் கணக்கிலடங்காத எண்ணிக்கையில் செஸ் வகைகள் உள்ளன.

  முக்கியத்துவம்

  சதுரங்கம் என்பது அறிவுசார்ந்த மற்றும் நம் மூளையின் செயல் திறன்களை மேம்படுத்த உதவும் ஒரு அற்புதமான விளையாட்டாகும். மேலும் மக்கள் மத்தியில் சகிப்புத்தன்மை, மரியாதை மற்றும் நேர்மையை ஊக்குவிக்கவும் இது உதவுகிறது. ஐநாவின் வளர்ச்சி இலக்குகள் மற்றும் வளர்ச்சிக்கான 2030 நிகழ்ச்சியில் இந்த கேம் ஒரு முக்கிய பங்கைக் வகிக்கிறது எனவும் ஐநா இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது.

  மேற்கோள்கள்

  "செஸ் என்பது மனதிற்கு அளிக்கப்படும் ஒரு வகையான உடற்பயிற்சி."

  - பிளேஸ் பாஸ்கல்

  "பலவீனமான வீரரை எதிர்கொள்ள தயாராகும் போது, நீங்கள் அதிக நம்பிக்கையுடன் இருக்கும் ஆபத்து இதில் உள்ளது."

  - விஸ்வநாதன் ஆனந்த்

  "சுவாரஸ்யமான விளையாட்டை விரும்புபவர்களால் மட்டுமே இந்த சதுரங்கத்தில் சிறந்து விளங்க முடியும்"

  - பாபி பிஷ்ஷர்

  “செஸ் நம் கவன சிதரல்களை கட்டுபடுத்தவும், உங்கள் திறன்களை மேம்படுத்தவும் உதவுகிறது. இந்த விளையாட்டு, உங்கள் செயல்களுக்கு நீங்களே பொறுப்பேற்பதையும், நிச்சயமற்ற சூழலில் உங்களுக்கு ஏற்படும் சிக்கலை எவ்வாறு தீர்ப்பது என்பதையும் கற்பிக்கிறது.

  - கேரி காஸ்பரோவ்
  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Chess, Chess Olympiad 2022

  அடுத்த செய்தி