உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் : மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம்
மேரி கோம்
  • Share this:
பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரின் அரையிறுதி ஆட்டத்தில், தோற்றதால் இந்தியாவின் மேரி கோமிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ரஷ்யாவின் உலான் உடே நகரத்தில், பெண்களுக்கான உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. 51 கிலோ எடைப் பிரிவில் நடைபெற்ற கால் இறுதிப் போட்டியில், கொலம்பியாவின் இன்கிரிட் வாலன்சியாவை எதிர்கொண்ட மேரி கோம், 5-0 என்ற கணக்கில் வெற்றிபெற்றார்.

அப்போது வெண்கலப் பதக்கத்தை தன்வசப்படுத்திய அவர், இன்று அரையிறுதியில் துருக்கியின் ககிரோக்லுவை சந்தித்தார். விறுவிறுப்பான இந்தப் போட்டியில், வீராங்கனைகள் ஒருவருக்கொருவர் சளைக்காமல் மோதிக்கொண்டனர்.


அதன்பின்னர் ஆட்டத்தின் இறுதிக்கட்டத்தில், ககிரோக்லுவின் கை மேலோங்கியது. இதனால், 4-1 என்ற புள்ளக்கணக்கில் துருக்கியின் ககிரோக்லு வெற்றிப் பெற்று இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார்.

இதன்மூலம், வெண்கலப் பதக்கத்துடன் மேரி கோம் தொடரில் இருந்து வெளியேறினார்.

நடுவரின் முடிவுக்கு எதிராக இந்தியா சார்பில் முறையீடு செய்த போதும் அது நிராகரிக்கப்பட்டது. உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் இது அவருக்கு எட்டாவது பதக்கம் ஆகும்.ஞாயிறு அன்று நடைபெறும் இறுதிப் போட்டியில், ரஷ்யாவின் லில்லியாவுடன், துருக்கி வீராங்கனை ககிரோக்லு மோதுகிறார்.

Also Watch

First published: October 12, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading