முகப்பு /செய்தி /விளையாட்டு / நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை.. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு பிறகு பதக்கம் வென்ற 2வது இந்தியர்..

நீரஜ் சோப்ரா வெள்ளி வென்று சாதனை.. உலக தடகள சாம்பியன்ஷிப்பில் அஞ்சு பாபி ஜார்ஜுக்கு பிறகு பதக்கம் வென்ற 2வது இந்தியர்..

வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

வெள்ளி வென்ற நீரஜ் சோப்ரா

Neeraj chopra: ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.

  • Last Updated :

ஓரிகானின் யூஜினில் நடந்த உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிப் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தூரம் எறிந்து வெள்ளிப் பதக்கத்தை வென்றார். அவர் இந்த தூரத்தை தனது நான்காவது முயற்சியில் பதிவு செய்தார்.

கிரெனடாவின் ஆண்டர்சன் பீட்டர்ஸ் 90.54 மீட்டர் தூரம் எறிந்து தங்கப் பதக்கம் வென்றார். பீட்டர்ஸ் தனது முதல் முயற்சியில் 90.21 மீ எறிந்தார், பின்னர் அதை தனது இரண்டாவது முயற்சியில் 90.46 மீ. அவர் தனது ஆறாவது முயற்சியில் தனது சிறந்த த்ரோவைப் பதிவுசெய்து, தனது உலகப் பட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துக் கொண்டார்.

செக் குடியரசின் ஜக்குப் வாட்லெஜ்ச் 88.09 மீட்டர் தூரம் எறிந்து வெண்கலப் பதக்கத்தையும், ஜெர்மனியின் ஜூலியன் வெபர் 86.86 மீட்டர் தூரம் எறிந்து 4வது இடத்தையும் பிடித்தார்.

உலகத் தடகளப் போட்டிகள் 2022: இந்திய வீரர் எல்தோஸ் பால் சாதனை

2003 ஆம் ஆண்டு வெண்கலம் வென்ற நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜுக்குப் பிறகு, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்கம் வென்ற இரண்டாவது இந்தியர் மற்றும் முதல் இந்திய ஆண் தடகள வீரர் என்ற பெருமையை சோப்ரா பெற்றார்.

சோப்ரா ஒரு தவறான வீசுதலுடன் தொடங்கினார். பின்னர் தனது இரண்டாவது முயற்சியில் 82.39 மீ. அவர் தனது மூன்றாவது முயற்சியில் 86.37 மீ. என்று முன்னேற்றம் அடைந்தார். தனது நான்காவது முயற்சியில் 88.13 மீ எறிந்து நான்காவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறினார்.

சோப்ரா 88.39 மீ. எரிந்து குரூப் ஏ தகுதிச் சுற்றில் முதலிடத்தைப் பிடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றார். பீட்டர்ஸ் 89.91 மீட்டர் தூரம் எறிந்து B குழுவில் முதலிடம் பிடித்தார்.

21 வயதான இவர் கடந்த மாதம் நடைபெற்ற தேசிய மாநிலங்களுக்கு இடையேயான சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றபோது, ​​ஒரு சீசன் மற்றும் தனிப்பட்ட சிறந்த 82.54 மீட்டர்களை பதிவு செய்தார்.

கடந்த ஆண்டு டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய தடகளப் போட்டியில் சோப்ரா முதல் தங்கம் வென்றார். 2008 பெய்ஜிங் விளையாட்டுகளில் தங்கம் வென்ற துப்பாக்கி சுடும் வீரர் அபினவ் பிந்த்ராவுக்குப் பிறகு, ஒலிம்பிக்கில் தனிநபர் தங்கம் வென்ற இரண்டாவது இந்தியர் ஆவார்.

மற்றொரு இந்திய வீரரான ரோஹித் யாதவ் 78.72 மீட்டர் எறிந்து 10வது இடத்தைப் பிடித்தார். ரோஹித் தகுதிச் சுற்றில் 80.42 மீட்டர் தூரம் எறிந்து 11வது இடத்தைப் பிடித்தார்.

First published:

Tags: Athlete, Neeraj Chopra