#HappyBirthdayAnilKumble: கும்ளே பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!

கிரிக்கெட் வரலாற்றில் ஜிம் லாகருக்கு பிறகு ஒரு இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்களையும் (10/74) வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அனில் கும்ளே பெற்றார்.

cricketnext
Updated: October 18, 2018, 4:39 PM IST
#HappyBirthdayAnilKumble: கும்ளே பிறந்தநாளுக்கு குவியும் வாழ்த்துகள்!
முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்ளே
cricketnext
Updated: October 18, 2018, 4:39 PM IST
இன்று தனது 48-வது பிறந்தநாளை கொண்டாடும் அனில் கும்ளேவுக்கு வாழ்த்து மழை பொழிந்து கொண்டிருக்கிறது. கும்ளேவின் பிறந்தநாளில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், கிரிக்கெட் துறையை சார்ந்தவர்கள் என பலர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அவர்கள் கும்ளேவோடு தங்களுக்கு இருந்த உறவு, இனிமையான தருணங்கள் ஆகியவற்றை நினைவுகூர்ந்து லெஜெண்டரி கிரிக்கெட் வீரரான அனில் கும்ளேவை புகழ்ந்து வருகின்றனர். குறிப்பாக சச்சின் டெண்டுல்கர், வீரேந்தர் சேவாக், யுவராஜ் சிங் ஆகியோர் உணர்வு பூர்வமான வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர்.

கிரிக்கெட்டின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், “எனது அன்பு நண்பரும், சாதனையாளருமான கும்ளேவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்” என்று தெரிவித்துள்ளார்.




இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் வீரேந்தர் சேவாக் தனக்கே உரிய ஸ்டையில் ட்வீட் செய்துள்ளார். அவருடைய வாழ்த்து செய்தியில், “இந்தியாவின் மிகச்சிறந்த மேட்ச் வின்னர்களில் ஒருவரான அனில் கும்ளேவுக்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மன உறுதிக்கும், தைரியத்திற்கும் சொந்தக்காரர் அவர். டெய்ல் எண்டில் யாக்கர் பந்து வீச வேகப்பந்து வீச்சாளர்களே திணறும்போது அதை அனாயாசமாக செய்தவர் அவர். எதிர்வரும் காலங்களிலும் மகிழ்ச்சியாக வாழ்த்துகிறேன் கும்ளே பாய்!” என்று கூறியுள்ளார்.



முன்னாள் கிரிக்கெட் வீரரான யுவராஜ் சிங் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “வாழ்நாள் சாதனையாளரான அனில் கும்ளேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். எதிர்வரும் காலமும் அவருக்கு சிறப்பாக அமைய வாழ்த்துகள்!” என்று கூறியுள்ளார்.



ஹர்பஜன் சிங் கூறியுள்ள வாழ்த்து செய்தியில், “எனது முன்மாதிரி, அணியின் சகவீரர், வழிகாட்டிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்!



முன்னாள் இங்கிலாந்து வீரர் ஆலன் வில்கின்ஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனில் கும்ளே பிறந்தநாளான இன்று நினைவு கூறத்தக்க நாளாக அமைந்துள்ளது. இந்த நாளில் அவருக்கும், அவரது குடும்பத்துக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.



முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷ்மன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனில் கும்ளேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். உங்களது வாழ்க்கை ஆசிர்வதிக்கப்படவும், நீங்கள் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் வெற்றி பெறவும் வாழ்த்துகிறேன்” என்று கூறியுள்ளார்.



முன்னாள் வீரர் முகமது கைஃப் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனில் கும்ளேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். இந்த ஆண்டு மகிழ்ச்சியான, மறக்க முடியாத ஆண்டாக இருக்க எனது வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.



இந்திய அணி வீரர் புஜாரா தனது ட்விட்டர் பக்கத்தில், “அனில் கும்ளேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்! ஓர் ஏணியைப் போல் எப்போதும் எனக்கு உந்துசக்தியாக உத்வேகம் அளிக்கும் உங்களுக்கு எனது அன்பான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.



இளம் வீரர் மனோஜ் திவாரி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “அனில் கும்ளே பாய்க்கு எனது பிறந்தநாள் வாழ்த்துகள்! நீங்களும், உங்கள் குடும்பமும் மகிழ்ச்சியாக வாழ இறைவனை பிராத்திக்கிறேன்” கூறியுள்ளார்.



இந்திய அணி வீரர் ஷிகர் தவான் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “பிறந்தநாள் வாழ்த்துகள் கும்ளே பாய்! நீங்கள் எப்போதும் எங்களுக்கு முன்மாதிரியாக விளங்குகிறீர்கள். உங்கள் வாழ்வில் எப்போதும் மகிழ்ச்சி பெருக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.



வாழ்த்து தெரிவித்த முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தாங்கள் கும்ளேவுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு தங்களது அன்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் பார்க்க:

1999-ம் ஆண்டு பிப்ரவரி 7-ம் நாள் டெல்லி ஃபிரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அனில் கும்ளே அந்த இன்னிங்ஸின் 10 விக்கெட்களையும் வீழ்த்தினார். கிரிக்கெட் வரலாற்றில் ஜிம் லாகருக்கு பிறகு ஒரு இன்னிங்ஸின் அனைத்து விக்கெட்களையும் (10/74) வீழ்த்திய வீரர் என்ற பெருமையை அனில் கும்ளே பெற்றார்.

வீடியோ இதோ:

First published: October 18, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...