விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நடால் - பெடரர் பலப்பரீட்சை!

Web Desk | news18
Updated: July 11, 2019, 10:59 PM IST
விம்பிள்டன் அரையிறுதிப் போட்டியில் நடால் - பெடரர் பலப்பரீட்சை!
Wimbledon 2019
Web Desk | news18
Updated: July 11, 2019, 10:59 PM IST
விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் நடால், பெடரர் நேருக்கு நேர் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.

லண்டனில் நகரில் மிகவும் பாரம்பரியமான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் காலிறுதி சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், ஜப்பானின் கெய் நிஷிகோரி உடன் மோதினார்.

முதல் சுற்றை 4-6 என தவறவிட்ட ரோஜர் பெடரர் அடுத்த சுற்றுகளில் ஆவேசமாக ஆடி தொடர்ந்து 3 சுற்றுகளை கைப்பற்றினார். இறுதியில் பெடரர் 4-6, 6-1, 6-4, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

Loading...
மற்றொரு ஆடவர் காலிறுதி போட்டியில் நடாலும், சாம் குவெரியும் மோதினர். ஆரம்பம் முதலே ஆக்ரோஷமாக ஆடிய நடால் 7-6, 6-2, 6-2 என்ற நேர்செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.நாளை நடைபெற முதல் அரையிறுதி போட்டியில் நம்பர் 1 வீரரான ஜோகோவிச் - பாடிஸ்டாவும், மற்றொரு அரையிறுதி போட்டியில் நடாலும் - பெடரரும் பலப்பரீட்சை நடத்த உள்ளனர்.
First published: July 11, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...