விம்பிள்டன்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் செரீனா வில்லியம்ஸ்

news18
Updated: July 12, 2018, 9:39 PM IST
விம்பிள்டன்: இறுதிப் போட்டிக்குள் நுழைந்தார் செரீனா வில்லியம்ஸ்
செரீனா வில்லியம்ஸ்
news18
Updated: July 12, 2018, 9:39 PM IST
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் போட்டியில் அமெரிக்காவைச் சேர்ந்த வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறுகிறது. இன்று பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் அரையிறுதிப் போட்டியில் லாட்வியா நாட்டைச் சேர்ந்த ஜெலினா ஓஸ்டாபென்கோவை வீழ்த்தி ஜெர்மனி வீராங்கனை ஏஞ்சலிக் கெர்பர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.

இதற்கு அடுத்தபடியாக இரண்டாவது அரையிறுதி போட்டியில் போட்டியில் ஜெர்மனி வீராங்கனை ஜூலியா கார்ஜஸ் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸை எதிர்கொண்டார். கார்ஜஸை எளிதாக எதிர்கொண்ட செரீனா 6-2,6-4 என்ற நேர்செட்களில் வெற்றிபெற்றார். இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் கெர்பரை எதிர்கொள்ளவிருக்கிறார்.

கிராண்ட்ஸ்லாம் தொடரில் இறுதிப் போட்டிக்குள் செரீனா வில்லியம்ஸ் விளையாட இருப்பது 30வது முறையாகும். இந்தப் இறுதிப் போட்டியில் ஒருவேளை செரீனா வில்லியம்ஸ் வென்றால் அது அவருக்கு 24-வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாக அமையும். செரீனா வில்லியம்ஸூக்கு குழந்தை பிறந்து 10 மாதங்கள் ஆன நிலையில் கிராண்ட்ஸ்லாம் தொடரில் விளையாடி வருவது குறிப்பிடத்தக்கது.
First published: July 12, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...