விம்பிள்டன் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார் ரோஜர் பெடரர்

news18
Updated: July 11, 2018, 10:37 PM IST
விம்பிள்டன் காலிறுதியில் அதிர்ச்சி தோல்வியை சந்தித்தார் ரோஜர் பெடரர்
ரோஜர் பெடரர்.
news18
Updated: July 11, 2018, 10:37 PM IST
விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் காலிறுதி போட்டியில் முன்னணி வீரரான ரோஜர் பெடரர் தோல்வியை சந்தித்துள்ளார்.

ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரான விம்பிள்டன், இங்கிலாந்தின் லண்டன் நகரில் நடைபெறுகிறது. இதில் ஆன்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதி ஆட்டம் இன்று தொடங்கியது.  ரோஜர் பெடரர், கெவின் ஆண்டர்சன், ரோனாக், இஸ்னர், டெல் பாட்ரோ, ஜோகோவிச், ஜோகோவிச், நிஷிகோரி ஆகியோர் காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றனர்.

இந்நிலையில் முதல் காலிறுதி ஆட்டம் இன்று மாலை 5.30 மணிக்கு தொடங்கியது. இந்தப் போட்டியில் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோஜர் பெடரரும் தென் ஆப்பிர்க்காவைச் சேர்ந்த கெவின் ஆண்டர்சன்னும் மோதினர். மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் ரோஜர் பெடரர் அதிர்ச்சி தோல்வியடைந்தார். மிக நீண்ட நேரம் நடைபெற்ற இந்தப் போட்டியில் 2-6,6-7,7-5,6-4,13-11 என்ற செட் கணக்கில் பெடரரை ஆண்டர்சென் வீழ்த்தினார். வழக்கமாக ஏஸ் ஷாட்டுகளை அடிப்பதில் வல்லவரான பெடரர் இந்த ஆட்டத்தில் 16 ஷாட்டுகளை மட்டுமே அடித்தார்.

மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செர்பிய வீரர் ஜோகோவிச்சும் ஜப்பானைச் சேர்ந்த கெட் நிஷிகோரியும் மோதினர். இந்த போட்டியில் 6-3,3-6,6-2,6-2 என்ற செட் கணக்கில் கெய் நிஷிகோரியை ஜோகோவிச் எளிதாக வீழ்த்தினார். தற்போதைய நிலையில் ஜோகோவிச்சும் கெவின் ஆண்டர்சன்னும் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.
First published: July 11, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...