விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டி... ஜோகோவிச், பெரெட்டினி பலப்பரீட்சை

ஜோகோவிச்

விம்பிள்டன் டென்னிஸில் இறுதி போட்டிற்கு 7-வது முறையாக தகுதி பெற்றார் நடப்பு சாம்பியன் ஜோகோவிச்.

 • Share this:
  விம்பிள்டன் டென்னிஸ் தொடர் இறுதிப்போட்டியில் நடப்பு சாம்பயின் ஜோகோவிச், இத்தாலி வீரர் பெரெட்டினி உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

  விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் நட்சத்திர வீரர் ஜோகோவிச் இறுதிப் போட்டிற்கு முன்னேறினார். கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடைபெற்று வருகிறது.

  இதில், ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ஜோகோவிச் கனடாவை சேர்ந்த ஷபோவலோவை எதிர்கொண்டார். விறு விறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ஜோகோவிச் 7-6, 7-5, 7-5 என்ற செட் கணக்குகளில் வெற்றி பெற்று விம்பிள்டன் டென்னிஸில் இறுதி போட்டிற்கு 7-வது முறையாக தகுதி பெற்றார்.

  Also Read : கோபா அமெரிக்க கால்பந்து : கடைசி நிமிடத்தில் த்ரில் கோல்... பெருவை வீழ்த்தி கொலம்பியா மூன்றாவது இடம்

  மற்றொரு அரையிறுதி போட்டியில் இத்தாலியை சேர்ந்த பெரெட்டினி 6-3, 6-0, 6-7, 6-4 என்ற செட் கணக்கில் போலந்தின் ஹர்காசை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறினார்.

  மேலும் விம்பிள்டன் இறுதி போட்டிக்குள் நுழைந்த முதல் இத்தாலி வீரர் என்ற பெருமையையும் பெற்றார். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் ஜோகோவிச்சுடன் பெரெட்டினி பலப்பரீட்சை நடத்த உள்ளார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: