• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • கோரத் தாண்டவத்தில் கொரோனா இரண்டாவது அலை: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

கோரத் தாண்டவத்தில் கொரோனா இரண்டாவது அலை: ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுமா?

கோப்புப் படம்

கோப்புப் படம்

டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நடைபெறுமா, ரத்தாகுமா என்ற கேள்வி அனைவரிடமும் எழுந்துள்ளது.

  • Share this:
டோக்கியோ ஒலிம்பிக் திருவிழா நடைபெறுமா, ரத்தாகுமா என்ற கேள்வி அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது. ஒரு புறம் ஜப்பான் மக்கள் வேண்டாம் என்றாலும், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி நடத்துவோம் என முரண்டு பிடிக்கிறது.

உலகின் உட்சபட்ச விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி இந்த ஆண்டு டோக்கியோவில் இன்னும் சில தினங்களில் களைகடவுள்ளது. ஏற்கனவே கொரோனா முதல் அலையால் கடந்த ஆண்டிலிருந்து இந்த ஆண்டிற்கு போட்டிகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டன. இந்த நிலையில் தற்போது இரண்டாவது அலை மேலும் பாடாய் படுத்துகிறது. இந்தியா போன்ற நாடுகளில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் வீரியமடைந்துள்ளது. நாடே வீட்டிற்குள் முடங்கிக்கிடக்கின்றன.

ஜப்பானிலும் இரண்டாவது அலையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அங்கிருக்கும் பொதுமக்கள் ஒலிம்பிக் போட்டியை நடத்தினால் மேலும் பல உயிர் இழப்புகளை சந்திக்க நேரிடும் என அரசை நோக்கி கேள்வி எழுப்புகின்றனர். அந்நாட்டு அரசும் அதையே விரும்புகிறது.

இந்நிலையில் ஒருநாடு தனிப்பட்ட முறையில் ஒலிம்பிக் போட்டியை ரத்துசெய்யவோ அல்லது ஒத்திவைக்கவோ முடியாது எனவும் சர்வதேச ஒலிம்பிக் சங்கத்தால் மட்டுமே முடிவெடுக்க முடியும் என விளக்குகிறார் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி பாஸ்கரன்.

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன், வீரர்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொண்ட சான்றிதழோடு போட்டியை பாதுகாப்பாக நடத்தி முடிப்போம் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் பீச் தெரிவித்துள்ளார்.

ஒலிம்பிக்போட்டி நடக்குமா? நடக்காதா? என்ற கேள்வியை ஒதுக்கிவைத்துவிட்டு போட்டிக்கு தயாராக தினமும் தீவிர பயிற்சி மேற்கொண்டுவருவதாகவும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் அறிவுறுத்தல் படி தடுப்பூசி போட்டுக்கொண்டு போட்டிக்கு தயாராக இருப்பதாகவும் கூறுகிறார் தமிழகத்திலிருந்து முதல் முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக்கில் களமிறங்கவிருக்கும் டேபிள் டென்னிஸ் வீர்ர சத்தியன் ஞானசேகரன்.

அடுத்து நடக்கவிருப்பது என்ன? என்ற கேள்வியோடு எதிர்நோக்கி காத்திருக்கும் விளையாட்டு ரசிகர்களுக்கும், வீரர்களுக்குமான நம்பிக்கை ஒலிம்பிக் போட்டி நடக்கும் என்பதே.



உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Karthick S
First published: