• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • PV Sindhu : டோக்யோ ஒலிம்பிக்கில் சிந்து வெண்கல பதக்கம் வெல்வாரா?

PV Sindhu : டோக்யோ ஒலிம்பிக்கில் சிந்து வெண்கல பதக்கம் வெல்வாரா?

ஒலிம்பிக் பேட்மின்டன் அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து, அதிர்ச்சி தோல்வியடைந்து ஏமாற்றம் அளித்தார். இருப்பினும் வெண்கலப் பதக்கத்தையாவது வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

  • Share this:
    டோக்யோ ஒலிம்பிக்கில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாவது அரையிறுதி நடைபெற்றது. இதில், தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள பி.வி.சிந்து, இரண்டாவது இடம் வகிக்கும் சீன தைபே வீராங்கனை தாய்-சூ-யிங் உடன் மோதினார். தொடக்கத்தில் இருந்தே இருவரும் சமபலத்துடன் மோதியதால் ஆட்டத்தில் விறுவிறுப்பு கூடியது. இருப்பினும், சிந்துவின் பலவீனத்தை அறிந்து கொண்ட தைபே வீராங்கனை நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் செட்டை வசப்படுத்தினார்.

    இதையடுத்து நெருக்கடிக்கு இடையே இரண்டாவது செட்டிலும் பி.வி.சிந்து, தடுமாற்றத்தை சந்தித்தார். இதிலும், தாய்-சூ-யிங்கின் கையே ஓங்கி இருந்ததால் இரண்டாவது செட்டையும் கைப்பற்றினார். முடிவில், 21-18, 21-12 என்ற நேர்செட்களில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்.



    மேலும், 2016 ரியோ ஒலிம்பிக் நாக்-அவுட் போட்டியில் சிந்துவிடம் அடைந்த தோல்விக்கு, தாய்-சூ-யிங் தற்போது பரிகாரம் தேடிக்கொண்டார். அரையிறுதியில் தோல்வியைத் தழுவிய பி.வி.சிந்து, மூன்றாவது இடத்திற்கான போட்டியில் சீன வீராங்கனை ஹி-பிங்ஜியாவோ (He Bingjiao) உடன் ஞாயிறன்று மோதவுள்ளார்.

    Also read : மதுரையின் முதல் ஒலிம்பிக் வீரர் திருஞானதுரை - கனன்று கொண்டிருக்கும் கனவின் கதை!



    இதில், சிந்து வெற்றிபெற்றால் வெண்கலப் பதக்கம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது..

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Tamilmalar Natarajan
    First published: