கொரோனா பாஸிட்டிவ் ரிசல்ட் வந்த பிறகும் தாய்லாந்து ஓபனில் சாய்னா நேவால் விளையாட அனுமதிக்கப்பட்டது ஏன்?

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரானது கடந்த ஓராண்டாக கொரோனா பரவலால் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்திற்கு பிந்தைய முதல் சர்வதேச தொடராகும்.

பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரானது கடந்த ஓராண்டாக கொரோனா பரவலால் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்திற்கு பிந்தைய முதல் சர்வதேச தொடராகும்.

  • Share this:
பாங்காக்கில் நடைபெற்று வரும் தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரானது கடந்த ஓராண்டாக கொரோனா பரவலால் உலகம் முழுவதும் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்திற்கு பிந்தைய முதல் சர்வதேச தொடராகும்.  இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த இந்திய பேட்மிண்டன் நட்சத்திர வீராங்கனையான சாய்னா நேவால் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார். கடைசி நேரத்தில் சாய்னாவை கலந்து கொள்ள அந்நாட்டு விளையாட்டுத்துறை அனுமதித்ததற்கான காரணம் என்ன?

ஹைதராபாத்தில் டிசம்பர் 7ம் தேதியன்று நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் சாய்னா நேவாலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் அறிகுறி இல்லாமல் பாதிக்கப்பட்டிருந்ததால் ஒரு வாரம் தனிமையில் இருந்து கொரோனாவில் இருந்து மீண்டு பயிற்சியில் ஈடுபட்டு அதன் பின்னர் தாய்லாந்து ஓபனுக்காக ஜனவரி 3ம் தேதி தாய்லாந்து கிளம்பிச் சென்றார்.

தாய்லாந்து சென்ற சாய்னாவுக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்ட நிலையில் நெகட்டிவ் என வந்தது. ஜனவரி 11ம் தேதி தாய்லாந்து ஓபன் தொடர் தொடங்கும் முன்னதாக அவருக்கு 3வது முறையாக கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. இதன் பரிசோதனை முடிவுகள் அடுத்த நாள் காலை வெளியானது. அதில் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றும் அவருடன் சேர்த்து மேலும் 3 வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதால் தொடரிலிருந்து விலகுமாறு அவரிடம் கேட்டுக்கொண்டனர்.இருப்பினும் போட்டிக் குழுவினரிடம் கொரோனா பரிசோதனை முடிவுகள் தவறான முடிவாக இருக்கலாம் எனவே தங்களின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு கமிட்டியினரிடம் சாய்னா கேட்டுக்கொண்டார்.

இதனிடையே மீண்டும் 2ம் முறையாக நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையிலும் சாய்னாவுக்கு கொரோனா பாஸிட்டிவ் என வந்தது. அதே நேரத்தில் அவருடன் பரிசோதிக்கப்பட்ட மற்ற 3 வீரர்களுக்கும் நெகட்டிவ் எனவே முடிவு வந்துள்ளது.

இதனையடுத்து சாய்னா உள்ளிட்ட 4 வீரர்களுக்கும் மீண்டும் பிசிஆர் சோதனையும், ஆண்டிபாடி சோதனையும் நடத்தப்பட்டது. இதனையடுத்து இந்த தொடருக்காக அமைக்கப்பட்ட 6 மருத்துவர்கள் அடங்கிய குழுவினர் இந்த முடிவுகளை சோதித்து ஒரு முடிவுக்கு வந்தனர். அதன்படி சாய்னாவின் பிசிஆர் சோதனை முடிவில் பாசிட்டிவ் என வந்துள்ளது. அதே நேரத்தில் ஆண்டிபாடி சோதனையிலும் பாசிட்டிவ் என வந்துள்ளது.

இவர்கள் அனைவரும் 2020-ன் இறுதிக்கட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததாலும் இவர்களால் பிற வீரர்களுக்கு நோய்த்தொற்று பரவல் பாதிப்பு இல்லை என முடிவுக்கு வந்தனர். இதன் காரணமாகவே சானியாவை இத்தொடரில் பங்கேற்க அனுமதித்திருக்கின்றனர்.
Published by:Arun
First published: