தீவிரவாதத்தை பொதுவெளியில் கண்டிக்கவேண்டிய அவசியமில்லை! - சானியா ட்வீட்டால் சர்ச்சை

#SaniaMirza Trolled Over Tweet Condemning #PulwamaAttack | புல்வாமா தாக்குதலை கண்டிக்காதது குறித்து சானியா மிர்சா தனது ட்விட்டரில் நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.

தீவிரவாதத்தை பொதுவெளியில் கண்டிக்கவேண்டிய அவசியமில்லை! - சானியா ட்வீட்டால் சர்ச்சை
சானியா மிர்சா. (Getty images)
  • News18
  • Last Updated: February 18, 2019, 4:49 PM IST
  • Share this:
தீவிரவாத தாக்குதலை நான் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பதிவிட்ட ட்வீட், சமூக வலைதளங்களில் கடும் விமர்சனைத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தீவிரவாத தாக்குதலில் சி.ஆர்.பி.எப் வீரர்கள் 40 பேர் உயிரிழந்தனர். உயிர் தியாகம் செய்த வீரர்களின் குடும்பங்களுக்கு பலரும் தங்களால் முடிந்த உதவியைச் செய்து வருகின்றனர்.

தீவிரவாத தாக்குதலுக்கு மத்திய, மாநில அரசுகளும், அரசியல் கட்சித் தலைவர்களும், பிரபலங்களும் தங்களின் கண்டனங்களைத் தெரிவித்தனர். இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக்கின் மனைவியும், இந்தியாவைச் சேர்ந்த டென்னிஸ் வீராங்கனையுமான சானியா மிர்சா எதுவும் கருத்து தெரிவிக்கவில்லை என்று சர்ச்சைகள் கிளம்பின.


இந்நிலையில், சானியா மிர்சா தனது ட்விட்டரில் அளித்த விளக்கத்தில், “பிரபலங்கள் என்றாலே தங்கள் தேசப்பற்றை காட்ட ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தாக்குதலைக் கண்டித்து பதிவு செய்ய வேண்டும் என விரும்புபவர்களுக்கே இந்தப் பதிவு. உங்களுடைய வெறுப்பு மற்றும் கோபத்தை வேறெங்கும் காட்ட வாய்ப்பு கிடைக்காததால், எங்களை போன்ற பிரபலங்கள் மீது காட்டுகிறீர்கள். தீவிரவாத தாக்குதல்களை பொதுவெளியில் நான் கண்டிக்க வேண்டிய அவசியம் இல்லை,” என்று கூறியிருந்தார்.மேலும், “தாக்குதலில் உயிரிழந்த சி.ஆர்.பி.எப் வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஆதரவாக நான் நிற்கிறேன். தற்போது அமைதிக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன்” என்று நீண்ட விளத்தை சானியா மிர்சா அளித்திருந்தார்.

இதனை அடுத்து, தீவிரவாத தாக்குதலை நான் கண்டிக்க வேண்டிய அவசியமில்லை என்று சானிய மிர்சா கூறியிருப்பது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், சானியா அளித்துள்ள நீண்ட விளக்கத்தில் எந்த இடத்திலும் பாகிஸ்தான் என்ற பெயர் குறிப்பிடப்படவில்லை என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.Video: கோலி - டி வில்லியர்ஸ் பேனருக்கு பால் அபிஷேகம்... பெங்களூரு ரசிகர்கள் அலப்பரை..!

Also Watch...

First published: February 18, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading