உலகின் மிகப் பெரிய செஸ் போட்டியான செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை நடத்தும் வாய்ப்பை பெற்ற தமிழக அரசு, அப்போட்டிகளை நடத்த மாமல்லபுரத்தைத் (Mamallapuram) தேர்ந்தெடுத்ததற்குப் பல காரணங்கள் உள்ளன.
180-க்கும் அதிகமான நாடுகளைச் சேர்ந்த வீரர்களுடன் 10 நாட்களுக்கும் மேலாக நடைபெற உள்ள, 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியைப் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வரலாற்றுச் சிறப்புமிக்க இப்போட்டி தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் நடைபெறுவது பெருமைக்குரியதாகக் கருதப்படுகிறது.
இதனிடையே, பல்வேறு முக்கிய வசதிகளின் அடிப்படையிலேயே, மாமல்லபுரம் போட்டி நிகழ்விடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மாமல்லபுரத்தில் உள்ள எளிமையான போக்குவரத்து வசதி, வீரர்கள், நிர்வாகிகள் மற்றும் பார்வையாளர்கள் தங்குவதற்குத் தேவையான அளவிற்கு நட்சத்திர விடுதிகள்.
பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவதில் இடையூறு இல்லாதது ஆகியவை முக்கிய காரணங்களாகக் கூறப்படுகிறன.
சென்னை விமான நிலையத்திலிருந்து மாமல்லபுரத்திற்கு ஒரு மணி நேரத்தில் சென்று விடலாம். பல்வேறு நினைவுச்சின்னங்கள், பாதுகாப்பான பொது இடங்களைக் கொண்ட கடலோர சுற்றுலா நகரமாக இருப்பதும் மாமல்லபுரத்திற்குச் சாதகமாக அமைந்துள்ளது.

மாமல்லபுரத்தில் பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங்.
பல்வேறு மிக முக்கிய பிரபலங்கள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களும் போட்டியைப் பார்வையிட வர உள்ளனர். இதன் காரணமாக மாணவர்கள் மற்றும் பணிக்குச் செல்வோருக்கு ஏற்படும், போக்குவரத்து நெரிசல் போன்ற அசவுகரியங்களைத் தவிர்க்கவே, சென்னைக்கு வெளியே உள்ள மாமல்லபுரம் தேர்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜிங்பிங் இடையேயான சந்திப்பும், மாமல்லபுரத்தில் 2019ம் ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது மற்றொரு காரணமாகக் கருதப்படுகிறது.
இதுபோன்று அடுத்தடுத்து நிகழும் சர்வதேச நிகழ்வுகள் மூலம், கிழக்கு கடற்கரைச் சாலையில் விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.