முகப்பு /செய்தி /விளையாட்டு / மறைந்த ஷேன் வார்னே ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிறந்த நாள் டிவீட் செய்தது யார்? இணையத்தில் வைரலாகும் பதிவு!!!

மறைந்த ஷேன் வார்னே ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிறந்த நாள் டிவீட் செய்தது யார்? இணையத்தில் வைரலாகும் பதிவு!!!

ஷேன் வார்ன்

ஷேன் வார்ன்

மறைந்த கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே டிவிட்டர் பக்கத்தில் இருந்து அவரது பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, Indiaaustraliaaustraliaaustraliaaustraliaaustraliaaustraliaaustralia

மறைந்த ஆஸ்திரேலிய சுழல்பந்து வீச்சாளரும் கிரிக்கெட் ஜாம்பவானுமான ஷேன் வார்னே பிறந்த நாளான இன்று அவரது டிவிட்டர் பக்கத்தில் இருந்து ஒரு பதிவு செய்யப்பட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் ஷேன் வார்ன். 1992ம் ஆண்டிலிருந்து 2007ம் ஆண்டு வரை ஆஸ்திரேலிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய  அவர் சச்சின் டெண்டுல்கர், பிரயன் லாரா, ஜெயசூரியா, அசாருதீன், ராகுல் டிராவிட், இன்சமாம் ,ஜாக் காலிஸ் உள்ளிட்ட பல சிறந்த பேட்ஸ்மேன்களை உள்ளிட்ட பல முன்னனி வீரர்களை தனது மாயஜால குழலால் திணறடித்தார்.

145 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 708 விக்கெட்டுகளையும், 194 ஒருநாள் போட்டிகளில் ஆடி 293 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.கிரிக்கெட் உலகில் இருந்து ஓய்வு பெற்ற ஷான் வார்ன் வர்ணனையாளராக இருந்து வந்தாார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி தாய்லாந்தில் உள்ள தனது வில்லாவில் மாரடைப்பு காரணமாக கிரிக்கெட் ஜாம்பவான் ஷேன் வார்னே உயிரிழந்தார்.

ஷேன் வார்ன்

இவரது மரணம் தொடர்பாக விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று ஷேன் வார்னே பிறந்த நாளை முன்னிட்டு அவரது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் இருந்து பதிவிட்டுள்ள பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: மறைந்த லெக்ஸ்பின் மேதை ஷேன் வார்ன் பிறந்த தினம் இன்று..!

அந்த பதிவில், இது ஒரு தனிநபரின் வாழ்க்கையின் செழுமை என்பது அவர்கள் என்ன சாதித்தார்கள் என்றும், மக்களிடங்களில் அவர்கள் ஏற்படுத்தி இருக்கும் தாக்கம் என்ன என்பதில் இருக்கும் என்றும், எப்போதும் எங்கள் இதயங்களில் என ஷேன் வார்னே  டிவிட்டரில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில்#ShaneWarne என்ற ஹேஸ்டாக் டிவிட்டரில் தற்போது டிரெண்ட் ஆகி வருகிறது. மேலும் அவரது சாதனையை நினைவு கூறும் வகையில் முன்னாள் மற்றும் தற்போதைய கிரிக்கெட் வீரர்கள் அவரை பற்றிய நினைவுகளை பகிர்ந்து பதிவிட்டு வருகின்றனர். மேலும் மறைந்த ஷேன் வார்னே டிவிட்டர் பக்கத்தில் இருந்து யார் பதிவு செய்தது எப்படி பதிவு வந்தது என விவாதங்களையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

First published:

Tags: Australia, Shane Warne, Twitter