• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • டி20-க்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?: பவுலரை கை காட்டும் ஆசிஷ் நெஹ்ரா

டி20-க்கான இந்திய அணியின் அடுத்த கேப்டன் யார்?: பவுலரை கை காட்டும் ஆசிஷ் நெஹ்ரா

அடுத்தவாரம் பிசிசிஐ கூடி இந்திய டி20 அணிக்கான கேப்டனை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
    டி20 ஓவர் போட்டிகளுக்கான இந்திய அணியின் அடுத்த கேப்டனுக்கு இவர்தான் சரியான நபர் என்று, பவுலரை கை காட்டியுள்ளார் முன்னாள் வீரர் ஆசிஷ் நெஹ்ரா.

    உலகக்கோப்பை தொடருக்கு பின்னர் டி20 போட்டிகளுக்கான இந்திய அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக விராட் கோலி அறிவித்திருந்தார். இந்நிலையில் அடுத்த கேப்டன் யார் என்ற விவாதம் ஆரம்பித்துள்ளார். இதில் ரோஹித் சர்மா மற்றும் கே.எல். ராகுலுக்குத்தான் அதிக ஆதரவு இருக்கிறது. கேப்டனுக்கான போட்டியில் ரிஷப் பண்ட்டும் இருக்கிறார்.

    இந்நிலையில், இவர்கள் அனைவரையும் விட வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்ப்ரித் பும்ரா தான் சரியான நபர் என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆசிஷ் நெஹ்ரா கூறியுள்ளார். அதற்கான காரணங்களையும் அவர் விவரித்திருக்கிறார். இதுதொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது-

    ரோஹித் சர்மாவை தவிர்த்து ரிஷப் பண்ட், கே.எல். ராகுல் ஆகியோரின் பெயர்கள் கேப்டன் பொறுப்புக்கு பரிந்துரைக்கப்படுகின்றன. ரிஷப் பண்ட் உலகம் முழுவதும் சுற்றுப் பயணம் செய்திருக்கிறார். கூல் டிரிங்க்ஸ் கொண்டு செல்லும் பணியைக் கூட செய்திருக்கிறார். சில முறை அவர் அணியில் இடம்பெறாத நிலையும் ஏற்பட்டது. மாயங்க் அகர்வாலுக்கு காயம் ஏற்பட்டதால் கே.எல்.ராகுல் டெஸ்ட் அணியில் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

    பும்ராவை பொருத்தவரை அவருக்கு விளையாட்டை புரிந்து கொள்ளும் ஆற்றல் அதிகம். அவர் ஒருநாள், டெஸ்ட், டி20 என 3 ஃபார்மேட்டுகளிலும் விளையாடியிருக்கிறார். வேகப்பந்து வீச்சாளர்கள் கேப்டன்களாக ஆகக் கூடாது என்று எந்த விதிமுறையும் கிடையாது. கேப்டன் பொறுப்புக்கு பும்ரா பொருத்தமான நபராக இருப்பார்.
    இவ்வாறு அவர் கூறியுள்ளார். அடுத்தவாரம் பிசிசிஐ கூடி இந்திய டி20 அணிக்கான கேப்டனை முடிவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து இம்மாத இறுதியில் 3 டி20 போட்டிகளிலும், 2 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Abdul Mushtak
    First published: