5-வது டெஸ்ட்: பாட்டு பாடிய ஹர்பஜன்... `பங்கரா’ நடனமாடிய தவான்- வீடியோ

news18
Updated: September 9, 2018, 5:17 PM IST
5-வது டெஸ்ட்: பாட்டு பாடிய ஹர்பஜன்... `பங்கரா’ நடனமாடிய தவான்- வீடியோ
ஹர்பஜனின் பாட்டுக்கு நடனமாடும் லாய்ட்.
news18
Updated: September 9, 2018, 5:17 PM IST
இந்தியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் ஹர்பஜன் சிங் இங்கிலாந்தின் முன்னாள் வீரர் டேவிட் லாய்டுக்கு பங்கரா நடனம் சொல்லிக்கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிவருகிறது.

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, ஃபீல்டிங்கில் இருந்த ஷிகர் தவான், பங்கரா நடனத்தை ஆடினார்.


Loading...
அப்போது ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ தொலைக்காட்சிக்கு வர்ணனையில் ஈடுபட்டிருந்த ஹர்பஜன் சிங், சக வர்ணனையாளர் லாய்டுக்கு பஞ்சாபிகளின் பாரம்பரிய நடனமான பங்கரா நடனத்தை சொல்லிக்கொடுத்தார். ஹர்பஜன் பாட்டிசைக்க, அதற்கு லாய்ட் நடனமாடினார். இந்த வீடியோ சமூக வலைதளங்கள் எங்கும் வைரலாக பரவிவருகிறது.

ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 -1 என்ற கணக்கில் இங்கிலாந்து வென்றுள்ள நிலையில் 5-வது போட்டியில் முதல் இன்னிங்சில் 332 ரன்கள் எடுத்துள்ளது. பேட்டிங் செய்துவரும் இந்திய அணி 74 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 230 ரன்கள் எடுத்துள்ளது.
First published: September 9, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்