கொரோனாவுக்கு பிறகு தொடங்கிய போட்டி: நிறவெறிக்கு எதிராக மைதானத்தில் கருப்பு உறை அணிந்து குரல் எழுப்பிய வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள்

கொரோனாவுக்கு பிறகு தொடங்கிய போட்டி: நிறவெறிக்கு எதிராக மைதானத்தில் கருப்பு உறை அணிந்து குரல் எழுப்பிய வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள்

வெஸ்ட் இண்டிஸ் வீரர்கள்

  • Share this:
இங்கிலாந்து அணிக்கு எதிரானப் போட்டியில் முதல் பந்து வீசுவதற்கு முன்பு ஃபீல்டிங்கில் நின்றிருந்த அனைத்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களும் மைதானத்தில் மண்டியிட்டு கருப்பு உறை அணிந்த கையை உயர்த்தினர். உடன் கள நடுவர்களும் இங்கிலாந்து வீரர்களும் அவர்களுடன் இணைந்து தாங்களும் எதிர்ப்பு குரலை வெளிப்படுத்தினர்.

அமெரிக்காவில் நிறவெறி தாக்குதலால் ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டார். இதை எதிர்த்து அந்நாட்டில் போராட்டங்கள் கடந்த ஒருமாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதற்கு ஆதரவாகவும், நிற வெறிக்கு எதிராகவும் கிரிக்கெட் வீரர்கள் களமிறங்கியுள்ளனர். Black Lives Matter என்ற வாசகம் பொறிக்கப்பட்ட ஜெர்ஸியுடன் இருநாட்டு வீரர்களும் களமிறங்கி நிறவெறிக்கு எதிராக தங்களுடைய குரலை உயர்த்தியுள்ளனர்.

போட்டி தொடங்குவதற்கு முன்னதாக கொரோனோ வைரஸை கட்டுக்குள் கொண்டுவருவதற்கு பாடுபட்ட கொரோனோ வாரியர்ஸ்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
Published by:Karthick S
First published: