• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • இரண்டாவது டெஸ்ட்: சரிவிலிருந்து மீண்டது மேற்கிந்தியத் தீவுகள்!

இரண்டாவது டெஸ்ட்: சரிவிலிருந்து மீண்டது மேற்கிந்தியத் தீவுகள்!

கோப்புப்படம்.

கோப்புப்படம்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ராஸ்டன் மற்றும் ஹோல்டரின் பொறுப்பான ஆட்டத்தால், மேற்கிந்தியத் தீவுகள் அணி சரிவில் இருந்து மீண்டது. முதல்நாள் முடிவில், அந்த அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் சேர்த்துள்ளது.

    இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட், ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெறுகிறது. இதில், டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர், பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக கிரேக் பிராத்வெயிட் மற்றும் கிரண் பவல் ஆட்டத்தை தொடர்ந்தனர். இப்போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கிய இந்திய வேகப்பந்தவீச்சாளர் ஷர்துல் தாகூர், மூன்றாவது ஓவரிலேயே காயம் ஏற்பட்டதால் வெளியேறினார்.

    ஆரம்பத்தில் இந்திய பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால், மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்வரிசை வீரர்கள் சீரான இடைவெளியில் தங்களது விக்கெட்களை பறிகொடுத்தனர்.

    ஆனால், பின்வரிசை வீரர்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ரன் வேகம் சீராக உயர்ந்தது. குறிப்பாக, 7-வது விக்கெட்டிற்கு இணைந்த ராஸ்டன் சேஸ் மற்றும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடந்தனர்.

    இந்த ஜோடியை பிரிக்க இந்திய பந்துவீச்சாளர்கள் கடுமையாக போராடியும், அது பலனளிக்காமல் போனது. ஒருவழியாக ஜேசன் ஹோல்டரை, 52 ரன்களில் உமேஷ் யாதவ் ஆட்டமிழக்கச் செய்தார். இவர்கள் இருவரும், இணைந்து 104 ரன்கள் சேர்த்து, அணிக்கு வலு சேர்த்தனர்.

    முதல் நாள் ஆட்டநேர முடிவில், மேற்கிந்திய தீவுகள் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 295 ரன்கள் சேர்த்தது. ராஸ்டன் சேஸ் 98 ரன்களுடனும், பிஷூ 2 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இந்திய தரப்பில், உமேஷ், குல்தீப் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Saravana Siddharth
    First published: