Home /News /sports /

நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரியை கையால் தள்ளிய மேற்குவங்க கவர்னர் இல.கணேசன் - நெட்டிசன்கள் கேலி

நட்சத்திர கால்பந்து வீரர் சுனில் சேத்ரியை கையால் தள்ளிய மேற்குவங்க கவர்னர் இல.கணேசன் - நெட்டிசன்கள் கேலி

சுனில் சேத்ரி

சுனில் சேத்ரி

கோப்பை வழங்கும் நிகழ்ச்சியின் போது வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கவர்னர் இல.கணேசனை மறைப்பது போன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • West Bengal, India
    துரந்தோ கோப்பை கால்பந்து போட்டி இறுதிப் போட்டி முடிந்தவுடன் பரிசு வழங்கும் விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுப்பதற்காக பெங்களூரு அணி கேப்டனும், நட்சத்திர வீரருமான சுனில் சேத்ரியை தனது கையால் தள்ளிய மேற்கு வங்க கவர்னர் இல.கணேசனை சமூக வலைதளங்களில் பல்வேறு தரப்பினர் கேலி செய்து வருகின்றனர். 

    பெங்களூரு எஃப்சி அணி மும்பை சிட்டி எஃப்சி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியின் பட்டத்தை வென்றது. கொல்கத்தா நகரில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டிக்கு பிறகு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்வுகள் நடத்தப்பட்டது. இதில், மேற்கு வங்க கவர்னர் இல.கணேசன் பங்கேற்று கோப்பைகளை வழங்கினார்.

    இதில் கோப்பை வழங்கு நிகழ்ச்சியின் போது வெற்றி பெற்ற பெங்களூரு அணியின் கேப்டன் சுனில் சேத்ரி, கவர்னர் இல.கணேசனை மறைப்பது போன்று போட்டோவுக்கு போஸ் கொடுத்தார். அப்போது, போட்டோவிற்கு போஸ் கொடுக்கும் விதமாக, சுனில் சேத்ரியை தனது கையை வைத்து இல கணேசன் தள்ளினார். இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இல.கணேசனின் செயலை நெட்டிசன்கள் கடுமையாக கேலியும் கிண்டலும் செய்து வருகின்றனர்.



    சுனில் சேத்ரி போன்ற நட்சத்திர வீரரை தன் போட்டோ போஸுக்காக தள்ளியது கடும் கோபாவேசத்தையும் உருவாக்கியுள்ளது. அவர் இந்திய அணியின் கேப்டன், இது என்ன செயல் என்று ஆளுநர் இல.கணேசனுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.  இதுகுறித்து, அன்ஷுல் சக்சேனா என்ற ஊடகவியலாளர் தனது ட்விட்டர் பக்கத்தில்,"துரந்தோ கோப்பை 2022 தொடரை வென்ற, மேற்கு வங்க கவர்னர் இல.கணேசனுக்கு வாழ்த்துகள்" என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார். மற்றொருவர், 2006ஆம் ஆண்டில், ரிக்கி பாண்டிங், சரத் பவாருக்கு செய்த செயலை நினைவுக்கூர்ந்ததோடு சுனில் சேத்ரியும் அப்படி செய்திருக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Viral Video

    அடுத்த செய்தி