• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • வட்டிக்கு கடன் வாங்கி தடகள போட்டிகளுக்கு அனுப்பினோம் - தங்கம் வென்ற தமிழக வீராங்கனை தாய் உருக்கம்

வட்டிக்கு கடன் வாங்கி தடகள போட்டிகளுக்கு அனுப்பினோம் - தங்கம் வென்ற தமிழக வீராங்கனை தாய் உருக்கம்

குறிப்பாக, சாதாரண குடும்ப பின்னணியில் தந்தையை இழந்துதாயின் அரவணைப்போடு வளர்ந்துதடகளத்தில் பி.டி.உஷாவின் 23 ஆண்டுகளுக்கு முந்தைய சாதனையை முறியடித்துள்ள நம்ம வீட்டு சிங்கப் பெண் தனலட்சுமி.

  • Share this:
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் கடந்த 15ம் தேதி தொடங்கி 19ம் தேதி வரை தேசிய தடகளப்போட்டிகள்  நடைபெற்றது.
இப்போட்டியில் தமிழ்நாட்டு அணியில்  திருச்சியில் இருந்து மட்டும் 20க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  திருச்சியைச் சேர்ந்த  வீரர், வீராங்கனை சாதனை புரிந்துள்ளனர்.

இதன்படி, பெண்கள் பிரிவில் திருச்சியைச் சேர்ந்த தனலட்சுமி 100 மீ ஓட்டத்தில் தங்கம் வென்றுள்ளார். இவர், 100 மீ தூரத்தை 11.39 வினாடிகளில் கடந்துள்ளார். குறிப்பாக, சர்வதேச வீராங்கனை டூட்டி சந்த், ஹீமா தாஸ் ஆகியோரை  பின்னுக்கு தள்ளி திருச்சி வீராங்கனை தனலட்சுமி சாதனை படைத்துள்ளார்

.திருச்சி விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி, திருச்சி சீதாலட்சுமி ராமசாமி கல்லூரியில் படித்தவர். அப்போது பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான போட்டிகளில் சாதனை புரிந்தவர். தற்போது தேசிய அளவிலான போட்டியில் தனி சாதனை படைத்து, சர்வதேச போட்டிகளில் பங்கெடுக்க தகுதி பெற்றுள்ளார்.

இதே போல்ஆண்கள் பிரிவில் 100 மீ ஓட்டத்தில், தஞ்சாவூரைச் சேர்ந்த திருச்சி ரயில்வே  ரயில்வே ஊழியரான தடகள வீரர்  இலக்கியதாசன் வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

தொடர்ந்து இறுதி நாளான நேற்று நடைபெற்ற 200மீ ஓட்டத்தில் தனலட்சுமி வெள்ளிப் பதக்கம் வென்றார். நூறு மீட்டரில் தனலட்சுமியிடம் பின்வாங்கிய ஹீமா தாஸ் 200 மீ தங்கம் வென்றார்.
ஆண்கள் பிரிவில், திருச்சி ரயில்வே ஊழியர் இலக்கியதாசன் 100மீ ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் பெற்ற நிலையில்  200 மீ ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றுள்ளார்.மேலும் 200 மீட்டர் ஓட்டத்தில்திருச்சி கிராப்பட்டிச் சேர்ந்த விக்னேஷ் வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறிப்பாக, சாதாரண குடும்ப பின்னணியில் தந்தையை இழந்துதாயின் அரவணைப்போடு வளர்ந்துதடகளத்தில் பி.டி.உஷாவின் 23 ஆண்டுகளுக்கு முந்தைய சாதனையை முறியடித்துள்ள நம்ம வீட்டு சிங்கப் பெண் தனலட்சுமி.
பதக்கம் வென்ற மூவருக்கும் பயிற்சி அளித்தவர் சர்வதேச தடகள வீரர் , திருச்சி ரயில்வே ஊழியரான மணிகண்டன் ஆறுமுகம். பல்வேறு சிரமங்களுக்கிடையே பயிற்சி அளித்து சாதனையாளர்களை உருவாக்கிய, மணிகண்டன் ஆறுமுகத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.

குறிப்பாக, ஏழ்மை, வறுமையையும் வென்று தனலட்சுமி சாதனை படைத்துள்ளார். திருச்சி மாவட்டம் விமான நிலையம் அருகே குண்டூர் பகுதியைச் சேர்ந்த சேகர் - உஷா தம்பதியின் 3வது மகள் தனலட்சுமி. இவர் 15 வயதில் தந்தையை இழந்தவர். ஆறாம் வகுப்பிலிருந்து ஓடத் தொடங்கி, இப்போது சர்வதேச தளங்களில் தடம் பதிக்க காத்திருக்கிறார். அவருடைய தாயார் உஷா, கறவை மாடு வளர்த்தும் தோட்ட வேலை மற்றும் 100 நாள் வேலைக்கு சென்றும் தனலட்சுமிக்கு உதவி வருகிறார்.



குறிப்பாக,  பல்வேறு சிரமங்களைக் கடந்து நகையை அடகு வைத்து , வட்டிக்கு கடன் வாங்கி தடகளப் பயிற்சிக்கும்  போட்டிக்கும் அனுப்பினோம். கடனுக்கான வட்டியைக் கூட கட்ட முடியவில்லை. பயிற்சியாளர் மணிகண்டன் ஆறுமுகம் நன்கொடையாளர்கள் உதவி வருகிறார். வருமான வரித்துறை, ரயில்வே பணிகளுக்கு முயற்சித்தும் கிடைக்கவில்லை.  அரசு வேலை கிடைத்தால் இன்னும் நிறைய சாதிப்பார். சர்வதேச அளவில் இந்தியாவிற்கு பெருமை சேர்ப்பார் என்கிறார் நம்பிக்கையாக தனலட்சுமியின் தாயார் உஷா சேகர்.



மேலும், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டியில் தனலட்சுமி முதலிடம் பெற்றுள்ளார். முதலிடம் பெற்றால் ₹ 1 லட்சம் பரிசு வழங்கப்படும்.  கொரோனாவால் மற்ற விளையாட்டுகளுக்கான போட்டிகள் நடத்தப்படவில்லை. இதனால் தடகளத்தில் தங்கம் வென்றும் அதற்கான பரிசுத் தொகை இன்னும்  கிடைக்கவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vijay R
First published: