• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த 'தல' தோனியை ஆரத்தழுவி முத்தமிட்ட ரெய்னா..! - வைரல் வீடியோ

நீண்ட நாட்களுக்கு பின் சந்தித்த 'தல' தோனியை ஆரத்தழுவி முத்தமிட்ட ரெய்னா..! - வைரல் வீடியோ

ரெய்னா - தோனி

ரெய்னா - தோனி

  • Share this:
    தோனியும் ரெய்னாவும் நீண்ட நாட்களுக்குப் பின் சந்தித்து ஆரத்தழுவி முத்தமிட்டுக்கொள்ளும் வீடியோ வைரலாகி வருகிறது.

    நீண்ட நாட்களுக்குப் பின் தோனி களமிறங்க உள்ளதால் வரவிருக்கும் ஐபிஎல் தொடரை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர். சமீபத்தில் பயிற்சிக்காக சென்னை வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் சென்னை ரசிகர்களால் 'சின்ன தல' என செல்லமாக அழைக்கப்படும் ரெய்னாவும் தற்போது அணியுடன் இணைந்துள்ளார்.

    நீண்ட நாட்களுக்குப் பிறகு சந்தித்துக்கொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்போடு முத்தமிட, அதை தனது அதிகாரப்பூர்வ பக்கத்தில்,'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை', என்று வேடிக்கையாக பகிர்ந்துள்ளது சென்னை அணி.



    தங்களது அபிமான நட்சத்திரங்கள் சந்தித்துக்கொண்ட இந்த நெகிழ்ச்சி தருணத்தை வைரலாக்கியுள்ளனர் சிஎஸ்கே ரசிகர்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: