முகப்பு /செய்தி /விளையாட்டு / நடாலுக்கு ஐடியா கொடுத்த பெடரர் - வைரலாகும் வீடியோ

நடாலுக்கு ஐடியா கொடுத்த பெடரர் - வைரலாகும் வீடியோ

ரோஜர் பெடரர் - ரஃபேல் நடால்

ரோஜர் பெடரர் - ரஃபேல் நடால்

  • Last Updated :

லாவர் கோப்பை டென்னிஸ் போட்டியில் நடால் பின்தங்கியிருந்த போது அவர் வெற்றிக்கு பெடரர் ஐடியா கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

டென்னிஸ் அரங்கில் பெரும் ஜாம்பவான்களாக இருப்பவர்கள் பெடரர் - நடால். ஆடுகளத்தில் இருவரும் ஆக்ரோஷமாக மோதி கொண்டாலும் பொதுவெளியில் இருவரும் சிறந்த நண்பர்களாகவே உள்ளனர்.

லாவர் கோப்பை டென்னிஸ் தொடரில் ஐரோப்பிய அணியை எதிர்த்து உலக அணி விளையாடி வருகிறது. இதில் ஐரோப்பிய அணியில் பெடருரும் நடாலும் இணைந்து விளையாடி வருகின்றனர்.

உலக அணியின் மிலோஸ் ரயோனிக்கை எதிர்த்து ரஃபேல் நடால் மோதினார். இந்த போட்டி மிகப் பெரிய சவாலாக அமைந்தது. போட்டியின் நடுவே நடாலுக்கு பெடரர் ஐடியா கொடுத்தார். இந்த வீடியோ தற்போது இணயைத்தில் வைரலாகி வருகிறது.

இந்த போட்டியில் பெடரர் 6-3, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். பெடர் - நடால் இணைந்து இரட்டையர் பிரிவிலும் விளையாட உள்ளனர்.

Also Watch 

First published:

Tags: Rafael Nadal, Roger Federer