Home /News /sports /

‘மின்னல் வேகத்தில் செஸ் விளையாடிய வீரன்’.. விஸ்வநாதன் ஆனந்த்

‘மின்னல் வேகத்தில் செஸ் விளையாடிய வீரன்’.. விஸ்வநாதன் ஆனந்த்

சிறிய வயதிலிருந்தே அதிக வேகத்துடன் விளையாடிய காரணத்தால், “மின்னல் வேகத்தில் விளையாடகூடிய சிறுவன்” என பெயர் பெற்ற இவர், ராபிட் உலக சாம்பியன்ஷிப் போட்டியை 2003, 2017 என இரண்டு முறை வென்றுள்ளார்.

    செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னை மாமல்லபுரத்தில் இன்று தொடங்கியுள்ளது. உலகெங்கிலும் இருந்து 188 நாடுகள் பங்குபெறும் இப்போட்டி கோலகலமாகத் தொடங்கியுள்ளது. உலக அளவில் இந்தியாவுக்கு பெருமைச் சேர்த்துக்கொண்டிருக்கும் விஸ்வநாதன் ஆனந்த் பற்றிய ஒரு செய்தி குறிப்பு.

    ஐந்து முறை உலக சாம்பியனான விஷ்வநாதன் ஆனந்த் 1969யில் சென்னையில் பிறந்தார். வீட்டில் இளைய மகனான ஆனந்த், தனது தாயாரிடம் செஸ் விளையாட்டை கற்றுக்கொண்டார்.
    1988யில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெற்ற இவர், இந்தியாவின் முதல் கிராண்ட் மாஸ்டர் என்ற பெருமையை பெற்றார்.

    2000ஆம் ஆண்டில் அலெக்ஸி ஷிரோவை வீழ்த்திய ஆனந்த், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். இரண்டு ஆண்டுகள் அந்த பட்டத்தை வைத்திருந்த அவர், மீண்டும் 2007ஆம் ஆண்டில், உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார். அதன் பிறகு தொடர்ந்து 6 ஆண்டுகள் விஸ்வநாத் ஆனந்த் வசமே இந்த பட்டம் இருந்தது. 2014ஆம் ஆண்டு மேக்னஸ் கார்ல்சன் இவரை வீழ்த்தி சாம்ப்பியன் பட்டத்தை வென்றார்.

    சிறிய வயதிலிருந்தே அதிக வேகத்துடன் விளையாடிய காரணத்தால், “மின்னல் வேகத்தில் விளையாடகூடிய சிறுவன்” என பெயர் பெற்றார். மேலும் இவரின் காலத்தில் பலர் இவரை அதிவேகமாக விளையாடகூடிய வீரர் என இவரை போற்றுவர். மேலும் அதிவேகமாக விளையாடும் ராபிட் உலக சாம்பியன்ஷிப் போட்டியை இவர் 2003, 2017 என இரண்டு முறை வென்றுள்ளார். மேலும் 2000ஆம் ஆண்டு இவர் உலக பிளிட்ஸ் கோப்பையை வென்றார்.

    2006 ஆம் ஆண்டு கிராம்னிக், டோபலோவ் மற்றும் கேரி காஸ்பரோவிற்கு பிறகு சர்வதேச செஸ் கூட்டமைப்பின் ஈ.எல்.ஓ புள்ளியான 2800 புள்ளிகளை கடந்த நான்காவது வீரர் என்ற பெருமையை பெற்றார் விஷ்வநாத் ஆனந்த். இவர் இந்த சாம்பியன் பட்டத்தை 21 மாதங்கள் தன் வசம் வைத்திருந்தார். இந்த பட்டத்தை அதிக நாட்கள் வைத்திருந்த வீரர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தில் உள்ளார் விஷ்வநாத் ஆனந்த்.

    இவருக்கு இந்திய அரசு, பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், பத்ம விபூஷன் என பல விருதுகளை அளித்து கௌரவித்தது.
    Published by:Raj Kumar
    First published:

    Tags: Chess Olympiad 2022, Viswanathan Anand

    அடுத்த செய்தி