10 வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் ஸ்கோர் குறித்த விராட் கோலியின் ட்வீட் வைரல்..

10 வருடங்களுக்கு முன்பு கிரிக்கெட் ஸ்கோர் குறித்த விராட் கோலியின் ட்வீட் வைரல்..

விராட் கோலி

விளையாட்டில் தனது ஒட்டுமொத்த முயற்சிகளையும், ஈடு இணையற்ற பங்களிப்பையும் அளிக்கும் கோலி, கடந்த திங்களன்று ஐ.சி.சி ஆண் கிரிக்கெட் வீரருக்கான (ICC Male Cricketer of the Decade) சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை (Sir Garfield Sobers Award) பெற்றார்.

  • Share this:
66 சென்சுரிகள், 94 அரை சதங்கள் , 20,396 ரன்கள் அப்பப்பா.. கேட்கவே மலைக்க வைக்கிறதல்லவா. இவையெல்லாம் விராட் கோலி நிகழ்த்திய சாதனைகளில் சில., விராட் கோலி இந்திய அணிக்கும் கிரிக்கெட் உலகிற்கும் அளித்த பங்களிப்பு ஈடு இணையற்றது. 

வெறும் 32 வயதான விராட் தனது மலைக்க வைக்கும் கிரிக்கெட் பயணத்தில் பல மைல்கற்களை எட்டியுள்ளார். விளையாட்டில் தனது ஒட்டுமொத்த முயற்சிகளையும், ஈடு இணையற்ற பங்களிப்பையும் அளிக்கும் கோலி, கடந்த திங்களன்று ஐ.சி.சி ஆண் கிரிக்கெட் வீரருக்கான (ICC Male Cricketer of the Decade) சர் கார்பீல்ட் சோபர்ஸ் விருதை (Sir Garfield Sobers Award) பெற்றார். இந்த செய்தியை இணையத்தில் பகிர்ந்துகொண்ட ஐ.சி.சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு, கோலியின் சாதனை குறித்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு அறிவித்தது.

கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்கள் கோலி, இந்த விருதுக்கு சரியான நபர் என்று இணையத்தில் வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர். அது மட்டுமல்லாது 10 வருடத்திற்கு முன் அவர் செய்த டீவீட் ஒன்றை தேடி எடுத்து தங்களின் மகிழ்ச்சியை பலருக்கும் நெட்டிசன்கள் பரப்பி வருகின்றனர். அதில் "எனது அணிக்காக நிறைய ரன்களை எடுக்கவேண்டும் என நான்  எதிர்பார்க்கிறேன் ..." என்று கோலி மார்ச் 16, 2010 அன்று ட்வீட் செய்திருந்தார். 

அந்த ட்வீட் பின்வருமாறு.

இந்த ட்வீட் கடந்த திங்களன்று இணையத்தில் வைரலாகியது, இதற்காக பலரும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துக்கொண்டனர்.

https://twitter.com/UtdSudin/status/1343499520403881984?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1343499520403881984%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fvirat-kohlis-10-year-old-tweet-goes-viral-after-indian-cricketer-bags-icc-cricketer-of-the-decade-award-3221747.html

 

 

 

 மேலும் ஐசிசியின் விருதை பெற்ற பிறகு பேட்டியளித்த கோலி (bcci.tvல் ஒரு வீடியோவில்)  the awards), "முதலில் இந்த விருதைப் பெறுவது எனக்கு ஒரு பெரிய மரியாதை அளித்ததாக நான் கருதுகிறேன். கடந்த தசாப்தத்தில் நான் என் இதயத்திற்கு மிக நெருக்கமாக வைத்திருக்கும் தருணங்களான 2011ல் உலகக் கோப்பை வெற்றி, 2013ல் சாம்பியன்ஸ் டிராபி வெற்றி மற்றும் 2018ல் ஆஸ்திரேலியாவில் தொடரை வென்றது என அவற்றை தொடர்ந்து இந்த விருதை நான் உயர்வாக கருதுகிறேன் என்றார். 

"இது தவிர, கடந்த பத்தாண்டுகளில் டீம் இந்தியாவுக்காகவும், தனிப்பட்ட முறையில் எனக்காகவும் நிறைய சிறப்பு விளையாட்டுக்கள் எனக்கு மிகுந்த உற்சாகத்தை அளித்துள்ளன. தனிப்பட்ட நாக்ஸை (personal knocks) நான் அதிகம் குறிப்பிட விரும்பவில்லை, ஏனென்றால் நான் அவற்றை மதிப்பிட வேண்டும், நானும் அதைச் செய்வதை விரும்பவில்லை, ஏனென்றால் எனக்கு இந்தியாவுக்காக விளையாடும் ஒவ்வொரு ஆட்டமும் மிக முக்கியமானது. 

எனவே நாட்டிற்காக விளையாடுவது எனக்கு ஒரு மரியாதை என்றார்.  களத்தில் என் முயற்சி எந்தவொரு நிலையிலும் என் அணியை வென்றெடுக்க முடியும் என்றால், அந்த மனநிலையில் நாம் நம் சொந்த வரம்புகள் மற்றும் திறன்களைத் தாண்டி செயல்படுவோம்". இந்த எண்ணம் எப்போதுமே எனது மனநிலையாகவே இருந்தது, அணிக்காக என் இதயத்தையும், ஆன்மாவையும் கொடுப்பேன். ஒரு அணியாக நாம் எப்போதும் சரியான திசையில் முன்னேறி வருகிறோமா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள், நாம் நல்ல முடிவுகளைப் பெற்றாலும் பெறவில்லை என்றாலும் பாசிட்டிவாக இருப்போம். 

இது நம் எல்லாருக்கும் உதவக்கூடிய மனநிலையாகும் என்று நான் அடிக்கடி எனக்குள்ளும் என் அணியினருக்கும் கூறுவேன் என்று விராட் கூறினார். இதற்கிடையில், ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் தசாப்தத்தின் ஐ.சி.சி டெஸ்ட் கிரிக்கெட் வீரர் விருதை (ICC Test cricketer of the decade award) வென்றார், ஆப்கானிஸ்தான் லெக்ஸ்பின்னர் ரஷீத் கான் தசாப்தத்தின் T20 கிரிக்கெட் வீரராக (T20I cricketer of the decade) தேர்வு செய்யப்பட்டுள்ளார். வியத்தகு ரன்அவுட்டைத் தொடர்ந்து 2011ல் நாட்டிங்ஹாமில் இயன் பெல்லை நினைவு கூர்ந்ததற்காக எம்.எஸ். தோனிக்கு ஐ.சி.சி ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட் விருது (ICC Spirit of Cricket award) வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Gunavathy
First published: