அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ

அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவகாரத்து செய்ய வேண்டுமென்று 'பாதாள் லோக்' வெப் சீரிஸ்க்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்த பாஜக எம்.எல்.ஏ நந்திகிஷோர் கூறியள்ளார்.

அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவாகரத்து செய்ய வேண்டும் - பாஜக எம்.எல்.ஏ
விராட் கோலி - அனுஷ்கா சர்மா
  • Share this:
அனுஷ்கா சர்மாவை விராட் கோலி விவகாரத்து செய்ய வேண்டுமென்று 'பாதாள் லோக்' வெப் சீரிஸ்க்கு எதிராக காவல்நிலையத்தில் புகார் அளித்த பாஜக எம்.எல்.ஏ நந்திகிஷோர் கூறியள்ளார்.

அமேசான் பிரைம் தளத்தில் வெளியாகி கவனிக்கத்தக்க வகையில் ஈர்த்த 'பாதாள் லோக்’ வெப் சீரிஸை அனுஷ்கா சர்மா தயாரித்திருந்தார். இந்துத்துவ அரசியல், சாதிய ஏற்றத்தாழ்வு, காவல்துறை சிஸ்டம், ஊடக அரசியல் என்று பல விஷயங்களை இந்த தொடர் உடைத்துப் பேசியது.

காட்சிகள் அனைத்தும் தற்போதைய அரசியல் சூழலுக்கு பொருந்தியதால், 7 மணி நேரம் ஓடக்கூடிய மொத்த தொடரும் விறுவிறுப்பாக அமைந்தது. எனினும், வலதுசாரி ஆதரவாளர்கள் சீரிஸ்க்கு எதிராக ஏற்கனவே கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.


இந்நிலையில் உத்திரபிரதேச எம்.எல்.ஏ நந்திகிஷோர் அளித்த பேட்டி ஒன்றில், “விராட் கோலி ஒரு தேசபக்தர். அவர் தேசத்திற்காக விளையாடி வருகிறார். எனவே அவர் அனுஷ்கா சர்மாவை விவாகரத்து செய்ய வேண்டும்“ என்று கூறியுள்ளார்.

'பாதாள் லோக்’ வெப் சீரிஸ் கதைப்படி, உத்தரப்பிரதேசத்தில் அமைச்சராக உள்ள ஒருவர் சாலைகளை திறந்து வைக்கும் புகைப்படம் நாளிதழில் வெளியாகியிருக்கும். அந்த புகைப்படத்தில் இருக்கும் ஒருவர் தற்போது பாஜக எம்.எல்.ஏ.வாக இருக்கிறார்.

உண்மையான புகைப்படமும், சீரியலில் இடம்பெற்ற புகைப்படமும்


நிஜத்திலும் அதேபோன்று உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், சாலைகளை திறந்து வைக்க எம்.எல்.ஏ நந்கிஷோர் குர்ஜார், அவரின் பின்னால் நிற்பார். 'பாதாள் லோக்’ சீரிஸிலும் நந்கிஷோரின் புகைப்படம் இடம்பெற்றிருக்கும்.

இதனால், தன் அனுமதி இல்லாமல் புகைப்படத்தை பயன்படுத்தியதாக அனுஷ்கா சர்மா மீது போலீசில் புகார் அளித்துள்ளார். மேலும், குர்ஜார் சமூக மக்களை தொடரில் தவறாக சித்தரித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.








First published: May 28, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading