ரசிகர்கள் இல்லையெனில் மேஜிக் காணாமல் போகும்...! விராட் கோலி கருத்து

கூச்சல், உற்சாகம், பதைபதைப்பு போன்ற உணர்வுகள் எதுவும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் கிடைக்காது

ரசிகர்கள் இல்லையெனில் மேஜிக் காணாமல் போகும்...! விராட் கோலி கருத்து
விராட் கோலி
  • Share this:
ரசிகர்கள் இல்லாமல் கிரிக்கெட் போட்டிகள் நடக்குமானால் மேஜிக் தருணங்கள் காணாமல் போகும் என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் கனக்டெட் என்ற நிகழ்ச்சியில் பேசிய விராட் கோலி, தற்போதைய சூழலில் ரசிகர்கள் இல்லாமல் போட்டிகளை நடத்துவது சாத்தியம் தான் என்றும் இதனை வீரர்கள் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என தெரியவில்லை என்றும் கூறினார்.

தன்னை போன்ற வீரர்கள் பலருக்கும் ரசிகர்களின் மத்தியிலே கிரிக்கெட் விளையாடி பழகிவிட்டதாக தெரிவித்த விராட் கோலி, அது ஒரு அலாதியான இன்பம் என்றார்.


கூச்சல், உற்சாகம், பதைபதைப்பு போன்ற உணர்வுகள் எதுவும் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் கிடைக்காது என்றும் விராட் கோலி குறிப்பிட்டார்.
சீனாவில் தொடங்கி தற்போது உலகிற்கே அச்சுறுத்தலாக இருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு பற்றிய தகவல்கள், அரசின் அறிவிப்புகள் ஆகியவற்றை நேரலையாக உடனுக்குடன் இங்கே தெரிந்து கொள்ளலாம்.Also see...
First published: May 9, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading