• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • மகளின் சிரிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - விராட் கோலி நெகிழ்ச்சி

மகளின் சிரிப்பை வார்த்தைகளால் விவரிக்க முடியாது - விராட் கோலி நெகிழ்ச்சி

விராட் கோலி - அனுஷ்கா சர்மா

விராட் கோலி - அனுஷ்கா சர்மா

வமிகா தங்களுடைய வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என விராட் கோலி மனம் திறந்துள்ளார்

  • Share this:
    ஐபிஎல் தொடருக்கு மத்தியில் தனது மகள் குறித்தும், மகளின் வருகையால்  தங்களது வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்தும் விராட் கோலி மனம் திறந்துள்ளார். விராட் கோலி பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மாவை காதலித்து கரம் பிடித்தார். இந்த தம்பதிக்கு கடந்த ஜனவரி 11-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது.

    இந்த தம்பதியினர் தங்களது மகளுக்கு வமிகா எனப் பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அனுஷ்கா ஷர்மா மகளை தூக்கிச்செல்ல லக்கேஜ்கள் அனைத்தையும் ஏர்போர்டில் விராட் கோலி எடுத்துச் சென்ற புகைப்படம் இணையத்தில் வைரலானது. கோலி பொறுப்பான குடும்பத்தலைவராகிவிட்டார் என இணையத்தில் மீம்ஸ்கள் பறந்தன. விராட் கோலியை கலாய்த்தும் சீல மீம்ஸ்கள் வட்டமடித்தன.

    வமிகா தங்களுடைய வாழ்க்கையில் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் என விராட் கோலி மனம் திறந்துள்ளார். “ இந்த நாள்களில் எல்லாம் முற்றிலும் மாறியதாக ஒரு உணர்வு. குழந்தையை பார்த்துக்கொள்ளும் பொறுப்பு தாய்-க்கு மட்டுமல்ல தந்தைக்கும் தான் உள்ளது. தாய், தந்தை இருவருமே குழந்தையை பார்த்துக்கொள்வது மிகவும் சிறப்பானது. நாங்கள் இருவரும் மிகவும் மகிழ்ச்சியாக இதனை செய்கிறோம். எங்களுடைய வாழ்க்கையே மாறியுள்ளது. உங்களுடைய குழந்தை உங்களை பார்த்து சிரிக்கும்போது அந்த சந்தோஷத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. தந்தையாக இருக்கும் சந்தோஷத்தை அனுபவிக்கத்தான் முடியும் அதை வெளிப்படுத்த முடியாது. ’எனக் கூறியுள்ளார் .

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: