Home /News /sports /

எந்த நாட்டிற்கு போனாலும் இதை மட்டும் விடமாட்டேன்... பிட்னெஸில் தெறிக்கவிடும் கோலி!

எந்த நாட்டிற்கு போனாலும் இதை மட்டும் விடமாட்டேன்... பிட்னெஸில் தெறிக்கவிடும் கோலி!

விராட் கோலி

விராட் கோலி

 • News18
 • Last Updated :
  இந்திய அணி கேப்டன் விரோத் கோலி ஒரு பிட்னெஸ் பிரியர் அல்ல, வெறியர் என்பது அனைவரும் அறிந்ததே அதை மெய்ப்பிக்கும் விதமாக மற்றுமொரு சுவரஸ்சிய சம்பவம் நிகழ்ந்துள்ளது.

  இந்திய கிரிக்கெட் அணி தற்போது டி-20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் பங்கேற்க நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்துள்ளது. அங்கு, இதுவரை நடந்த இரண்டு 20-20 போட்டியிலும் விளையாடியுள்ள இந்திய அணி வெற்றிபெற்றுள்ளது.

  இந்திய கிரிக்கெட்டில் கோலியின் வருகைக்குப் பிறகு உடற்தகுதி என்பது ஒரு முக்கிய தகுதியாக பார்க்கப்பட்டு வருகிறது. காரணம், கேப்டன் கோலி ஒரு தீவிர பிட்னெஸ் பிரியர். விக்கெட்டுகளுக்கிடையில் மின்னல் வேகத்தில் ஓடுவதாகட்டும் இல்லை, பெளண்டரி லைனுக்கு அருகிலிருந்து பந்தை புல்லட் வேகத்தில் வீசுவதாகட்டும், இவற்றில் கோலியின் வேகமே அவரது உடற்தகுதியை பறைசாற்றிவிடும்.  இதேபோன்ற உடற்தகுதியை அணி நிர்வாகம் மற்ற வீரர்களிடமும் எதிர்பார்ப்பதால் தான் யோ யோ டெஸ்ட் உள்ளிட்டவை இந்திய அணியில் இடம்பெற கட்டாயமாக்கப்பட்டன. ரெய்னா போன்ற முண்ணனி வீரர்களின் கிரிக்கெட் வாழ்க்கையிலும் இந்த உடற்தகுதிதான் விளையாடின.

  இருப்பினும் தற்போது அணியில் இடம்பிடித்துள்ள வீரர்களிடம் இதுபோன்ற கட்டுப்பாடுகள் நல்ல விளைவுகளையே ஏற்படுத்தியுள்ளன. குறிப்பாக பாண்டே, ஸ்ரேஸ் ஐயர், ஜடேஜா போன்ற வீரர்கள் சமீபகாலமாக கோலிக்கு இணையாகவே களத்தில் செயலாற்றிவருகின்றனர்.  கோலியும் தொடர்ந்து பிட்டாக இருக்க பல்வேறு பயிற்சிகளையும், உணவுக் கட்டுப்பாடுகளையும் சமரசமில்லாமல் கடைபிடித்து வருகிறார். குறிப்பாக இவர் அருந்தும் குடிநீர் மட்டும் பிரான்ஸில் இருந்து வரவழைக்கப்படுகிறதாம். அதன் ஒரு லிட்டர் விலை இந்திய மதிப்பில் 600ரூபாய் என்றும் கூறப்படுகிறது. கோலி தனது உடல்நலன் பற்றி எந்தளவிற்கு அக்கறை கொண்டுள்ளார் என்பதற்கு இதுவே சாட்சி. அதேவேளையில் எங்கு சென்றாலும் உடலை பிட்டாக வைத்துக்கொள்ள சில பிரத்யேக பயிற்சிகளையும், அவர் விடாமல் செய்துவருகிறார்.  தற்போது கூட நியூலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், அங்குள்ள ஒரு உடற்பயிற்சிக்கூடத்தில் சக வீரர்களுடன் இணைந்து, தான் உடற்பயிற்சி செய்யும் ஒரு வீடியோவை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த அவரது ரசிகர்கள்,”ப்பா, என்ன stamina” என்பது போன்ற கமெண்டுகளை தட்டிவிட்டு அதை வைரலாக்கி வருகின்றனர்.   
  View this post on Instagram
   

  Putting in the work shouldn't be a choice, it should be a requirement to get better. #keeppushingyourself


  A post shared by Virat Kohli (@virat.kohli) on


  முன்னதாக சில நாட்களுக்கு முன்பு இதே போன்றதொரு பயிற்சிவேளைக்குப் பிறகான உணவருந்தும் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருந்தார்.

  எங்கு சென்றாலும், எந்தச் சூழ்நிலையிலும் தன்னுடைய பிட்னெஸ் விசயத்தில் கோலி காட்டும் அக்கறையும் தீவிரமும் அவரை போலவே கிரிக்கெட் விளையாடத் துடிக்கும் இளைஞர்களுக்கும், உடலைப் பேண விரும்பும் மக்களுக்கும் தூண்டுகோலாக அமையும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.

  Also see...
  Published by:Vinothini Aandisamy
  First published:

  Tags: Virat Kohli

  அடுத்த செய்தி