ஐ.சி.சி வெளியிட்ட ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியல்: டாப் 2 இடங்களில் இந்திய பேட்ஸ்மேன்கள்

விராட் கோலி, ரோஹித் சர்மா
- News18 Tamil
- Last Updated: July 29, 2020, 9:43 PM IST
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்ட ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் 871 புள்ளிகளுடன் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதல் இடத்திலும், 855 புள்ளிகளுடன் துணைக்கேப்டன் ரோஹித் ஷர்மா இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதல் இடத்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் தக்கவைத்துள்ளார். டி 20 தரவரிசையில் கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். விராட், ரோஹித் முறையே 10, 11 வது இடத்தை பிடித்துள்ளனர். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கைப்பற்றியுள்ளார்.
பந்துவீச்சை பொருத்தவரை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 719 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், டெஸ்ட் தரவரிசையில் 8 வது இடத்தையும், டி 20 போட்டிகளில் 13 வது இடத்தையும் பிடித்துள்ளார். பும்ராவை தவிர மற்ற இந்திய பந்துவீச்சாளர்கள் முதல் பத்து இடங்களுக்குள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணிகளுக்கான தரவரிசையில் இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் 3 வது இடத்தையும், ஒருநாள் போட்டிகளில் இரண்டாவது இடத்தையும், டி20 போட்டிகளில் 3 வது இடத்தையும் கைப்பற்றியுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடான டெஸ்ட் போட்டியில் அசத்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஏழு இடங்கள்முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிக்கான தரவரிசையில் விராட் கோலி இரண்டாவது இடத்தில் நீடிக்கிறார். முதல் இடத்தை ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் தக்கவைத்துள்ளார். டி 20 தரவரிசையில் கே.எல்.ராகுல் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார். விராட், ரோஹித் முறையே 10, 11 வது இடத்தை பிடித்துள்ளனர். முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் கைப்பற்றியுள்ளார்.
பந்துவீச்சை பொருத்தவரை வேகப்பந்துவீச்சாளர் பும்ரா ஒருநாள் போட்டிக்கான தரவரிசையில் 719 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தையும், டெஸ்ட் தரவரிசையில் 8 வது இடத்தையும், டி 20 போட்டிகளில் 13 வது இடத்தையும் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடான டெஸ்ட் போட்டியில் அசத்திய இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் ஏழு இடங்கள்முன்னேறி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார்.