இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை

cricketnext
Updated: February 13, 2018, 6:50 AM IST
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இன்று பலப்பரீட்சை
பயிற்சியில் ஈடுபடும் இந்திய வீரர்கள்
cricketnext
Updated: February 13, 2018, 6:50 AM IST
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையே இன்று 5-வது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. தொடரை வெல்லும் முனைப்புடன் இந்திய அணி இன்று களமிறங்க இருக்கிறது.

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 6  ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றது.  முதல் போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 2-வது ஆட்டத்தில் 9 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் 3-வது போட்டியில் 124 ரன்கள் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 4-வது போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி வெற்றி பெற்று மீண்டு வந்தது.

இந்நிலையில் இன்று தென் ஆப்பிரிக்கா நாட்டின் எலிசபெத் நகரில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் 5-வது ஒருநாள் போட்டி நடைபெற இருக்கிறது. இந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமானது. இந்த மைதானத்தில் நடைபெற்ற கடைசி இரு ஆட்டங்களில் தென் ஆப்பிரிக்க அணி சுழற்பந்து வீச்சாளர்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்திய அணியில் கேதர் ஜாதவ் காயம் காரணமாக உடல்நிலை மோசமாகியுள்ள நிலையில் அவருக்கு பதிலாக இன்றைய வீட்டத்தில் வேறொரு வீரர் களமிறக்கப் படலாம் எனத் தெரிகிறது. சுழற்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்ற மைதானம் என்பதால் தேர்வில் சுழற்பந்துவீச்சாளருக்கு முக்கியத்துவம் அதிகம் கொடுக்கப்படலாம்.

இந்திய நேரப்படி இன்றையப் போட்டி மாலை 4.30 மணிக்கு தொடங்க இருக்கிறது. சோனி டென் சேனலில் போட்டியை காணமுடியும்.
First published: February 13, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்