இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் விராட்- அனுஷ்கா ஜோடி...!

இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் விராட்- அனுஷ்கா ஜோடி...!

விராட் - அனுஷ்கா

அனுஷ்கா ஷர்மா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், அவருடன் இருப்பதற்காக விராட்கோலி தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
உலக அளவில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆதிக்கம் செலுத்தும் முதல் 25 நபர்களின் பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும், அவரது மனைவி அனுஷ்கா சர்மாவும் இடம்பிடித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் உலகளவில் ஆதிக்கம் செலுத்துபவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி (Virat Kholi) 11வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது மனைவி அனுஷ்கா சர்மா (Anushka Sharma) 24வது இடத்தைப் பிடித்துள்ளார். அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவும் சராசரியாக 2.6 மில்லியன் பார்வைகளை பெறுவதாக கூறப்பட்டுள்ளது. இந்தியர் ஒருவரின் அதிகபட்ச ரேங்கை விராட்கோலி பெற்றுள்ளார்.

விராட்கோலிக்கு அடுத்தபடியாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி 17வது இடத்தில் உள்ளார். கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Christiano Ronaldo)  உலகளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். இவரின் ஒரு பதிவு சராசரியாக 4.6 மில்லியன் பார்வைகளை பெறுவதாக இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது. விராட் கோலி, அனுஷ்கா சர்மா, பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக பாலிவுட் நடிகைகள் காத்ரினா கைப்  (Katrina kaif) மற்றும் தீபிகா படுகோனே (Deepika padukone) இடம்பிடித்துள்ளனர். 

இவர்கள் உலகளவில் இன்ஸ்டாகிராமில் ஆதிக்கம் செலுத்தும் 50 நபர்களுக்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளனர். காத்ரினா கைப் 43 வது இடத்தையும், தீபிகா படுகோன் 49வது இடத்தையும் பிடித்துள்ளனர். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர்கள் ஏற்படுத்தும் விழிப்புணர்வு பரப்புரைகள், பார்வையாளர்களின் வருகை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டிருப்பதாக ஹைப் ஆடிட்டர் தெரிவித்துள்ளார்.

Also read... ஒலிம்பிக்கில் சேர்க்கப்பட்ட பிரேக் டான்ஸ்- தயாராகும் தமிழர்கள்!

போர்ப்ஸ் பத்திரிக்கை கடந்த மே மாதம் உலகில் அதிகம் வருவாய் ஈட்டும் 100 விளையாட்டு வீரர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் 66வது இடத்தை பிடித்த ஒரே இந்திய விளையாட்டு வீரரான விராட் கோலி, ஆண்டுக்கு 26 மில்லியன் டாலர்களை வருவாயாக ஈட்டுவதாக தெரிவித்துள்ளது. போட்டிகளில் பெறும் வெற்றி மற்றும் பரிசுகள்  மூலம் 2 மில்லியன் டாலர்களையும், விளம்பரங்கள், ஸ்பான்ஷர் உள்ளிட்டவைகள் மூலம் 24 மில்லியன் டாலர்களையும் அவர் வருவாயாக ஈட்டுவதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.

தற்போது, ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் செய்திருக்கும் இந்திய அணியுடன் விராட் கோலி இருக்கிறார். இவரது தலைமையிலான இந்திய அணி ஒருநாள் தொடரை இழந்தாலும், 20 ஓவர் தொடரை வென்றது. வரும் 17ம் தேதி அடிலெய்டில் தொடங்கும் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் பகலிரவு டெஸ்ட் போட்டியில் பங்கேற்றுவிட்டு, உடனடியாக தாயகம் திரும்புகிறார். அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால், அவருடன் இருப்பதற்காக விராட்கோலி தாயகம் திரும்ப உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: