Forbes பணக்காரர் பட்டியல்: தோனியை ஓரங்கட்டிய கோலி!

#ViratKohli among world's highest-paid athletes | Forbes இதழ் 2018-ம் ஆண்டில் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபங்களின் டாப் 100 பட்டியலை வெளியிட்டுள்ளது.

news18
Updated: December 5, 2018, 2:18 PM IST
Forbes பணக்காரர் பட்டியல்: தோனியை ஓரங்கட்டிய கோலி!
விராட் கோலி (Cricket Australia)
news18
Updated: December 5, 2018, 2:18 PM IST
2018-ம் ஆண்டில் அதிக வருவாய் பெற்ற இந்தியப் பிரபலங்களின் Forbes டாப்-100 பட்டியலில் விளையாட்டு வீரர்களில் விராட் கோலி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இந்தியாவில் 2018-ம் ஆண்டு அதிகம் சம்பாதித்த டாப்-100 பிரபலங்களின் பட்டியலை Forbes இதழ் வெளியிட்டுள்ளது. நடப்பாண்டில் ரூ. 253.25 கோடி வருவாய் பெற்று ஒட்டுமொத்த பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் சல்மான் கான் முதலிடம் பெற்றுள்ளார்.

இரண்டாம் இடத்தில், ரூ. 228.09 கோடி வருவாய் பெற்ற இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி உள்ளார். மூன்றாம் இடத்தில், ரூ. 185 கோடி உடன் 2.0 படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் உள்ளார். டாப்-10 பட்டியலில் அமீர் கான், அமிதாப் பச்சன், ரன்வீர் சிங், சச்சின் டெண்டுல்கர், அஜய் தேவ்கன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்திய விளையாட்டு வீரர்களுக்கான பட்டியலில் ‘கிங்’ கோலி, முதல் இடத்தில் உள்ளார். இவரின் கடந்த ஆண்டு வருமானம் ரூ. 100.72 கோடி. நடப்பாண்டு வருமானம் ரூ. 228.09 கோடி. நூறு சதவீதம் அதிகரித்து சுமார் ரூ. 130 கோடிக்கு மேல், கோலியின் வருமானம் உயர்ந்துள்ளது.

Virat Kolhi Wish To Womens Team
விராட் கோலி வாழ்த்து | Twiter/Virat Kohli


கோலிக்கு அடுத்து இருப்பவர் ‘தல’ தோனி. 37 வயதான இவர், கடந்த ஆண்டு வருமானத்தை விட சுமார் ரூ. 40 கோடி அதிகம் சம்பாதித்துள்ளார். தோனியின் நடப்பாண்டு வருமானம் ரூ. 101.77 கோடியாக உள்ளது.

இந்த வரிசையில், 3-வது இடத்தில் இருப்பவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். கடந்த ஆண்டை விட இரண்டரைக் கோடி ரூபாய் குறைவாக சம்பாதித்த இவரின் வருமானம் ரூ. 80 கோடியாக இருக்கிறது. கிரிக்கெட் வீரர்கள் ஆதிக்கம் செலுத்திய இந்தப் பட்டியலில் 4-வது இடத்தில், நட்சத்திர பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து உள்ளார். இவரின் நடப்பாண்டு வருமானம் ரூ. 36.5 கோடி.
Loading...
PV-SIndhu
பி.வி.சிந்து (Getty)


அடுத்தடுத்த இடங்களில், கிரிக்கெட் வீரர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, அஸ்வின், புவனேஸ்வர் குமார், சுரேஷ் ரெய்னா ஆகியோர் உள்ளனர். அதிகம் சம்பாதித்த விளையாட்டு வீரர்கள் பட்டியலில், 10-வது இடத்தில் பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இருக்கிறார்.

Also Watch...

First published: December 5, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...
  • I agree to receive emails from NW18

  • I promise to vote in this year's elections no matter what the odds are.

    Please check above checkbox.

  • SUBMIT

Thank you for
taking the pledge

Vote responsibly as each vote
counts and makes a difference

Click your email to know more

Disclaimer:

Issued in public interest by HDFC Life. HDFC Life Insurance Company Limited (Formerly HDFC Standard Life Insurance Company Limited) (“HDFC Life”). CIN: L65110MH2000PLC128245, IRDAI Reg. No. 101 . The name/letters "HDFC" in the name/logo of the company belongs to Housing Development Finance Corporation Limited ("HDFC Limited") and is used by HDFC Life under an agreement entered into with HDFC Limited. ARN EU/04/19/13618
T&C Apply. ARN EU/04/19/13626