ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 14-வது சதம் அடித்து சாதனை

ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக விராட் கோலி 14-வது சதம் அடித்து சாதனை
விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போது
  • News18
  • Last Updated: October 22, 2018, 8:28 AM IST
  • Share this:
மேற்கிந்திய தீவுகளுக்கெதிரான முதல் ஒருநாள் போட்டியில் கேப்டன் விராட்கோலி, துணை கேப்டன் ரோகித் சர்மா இணை வியத்தகு சாதனைகளை படைத்துள்ளது. கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனைகளையும் இருவரும் முறியடித்துள்ளனர்.

இப்போட்டியில் இந்திய கேப்டன் விராட்கோலி, துணைகேப்டன் ரோகித்சர்மா இணை 246 ரன்கள் குவித்து அபார சாதனை படைத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்யும் போது இந்திய இணை குவித்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப் ரன்கள் இதுவாகும்.

டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் 60 சர்வதேச சதங்கள் என்ற இலக்கை குறைவான போட்டிகளில் எட்டி சச்சின் டெண்டுல்கரின் உலக சாதனையை விராட் கோலி முறியடித்துள்ளார்.


60 சதங்களை சச்சின் டெண்டுல்கர் 427 இன்னிங்ஸ்களில் குவித்த நிலையில் 386 இன்னிங்ஸ்களிலேயே இந்த இலக்கை விராட் கோலி முறையடித்துள்ளார். இதே போன்று 50 ஒருநாள் போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 14 வது சதத்தை விராட் கோலி எட்டியுள்ளளார். உலக அளவில் 22 சதங்களுடன் ரிக்கி பாண்டிங் முதலிடத்தில் உள்ளார்.

ஒரே ஆண்டில் 2,000 ரன்களுக்கு மேல் தொடர்ந்து மூன்றாவது முறையாக விராட் கோலி குவித்துள்ளார். இந்த விதத்திலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.  துணை கேப்டன் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளில் 6 முறை 150 ரன்களுக்கு மேல் எடுத்து சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.

மேலும் உலக கிரிக்கெட் வரலாற்றின் பல சாதனை புள்ளி விவரங்களை விராட் கோலி, ரோகித் சர்மா இணை ஒரே போட்டியில் முறியடித்துள்ளது.Also see...

First published: October 22, 2018
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்