முகப்பு /செய்தி /விளையாட்டு / TN vs Karnataka| சரவெடி ஷாருக்கான் 7 பவுண்டரி 6 சிக்ஸ், 39 பந்தில் 79, ஜெகதீசன் சதம்- தமிழ்நாடு 354 ரன்கள் குவிப்பு

TN vs Karnataka| சரவெடி ஷாருக்கான் 7 பவுண்டரி 6 சிக்ஸ், 39 பந்தில் 79, ஜெகதீசன் சதம்- தமிழ்நாடு 354 ரன்கள் குவிப்பு

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி 8 விக்கெட்டுக்கு 354 ரன்கள் சேர்த்து உள்ளது. ஜெகதீசன் சதம் விளாச, பின்னால் இறங்கி அதிரடி மன்னன் சரவெடி ஷாருக்கான் வெளுத்து வாங்கினார். 

  • 1-MIN READ
  • Last Updated :

    விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி 8 விக்கெட்டுக்கு 354 ரன்கள் சேர்த்து உள்ளது. ஜெகதீசன் சதம் விளாச, பின்னால் இறங்கி அதிரடி மன்னன் சரவெடி ஷாருக்கான் வெளுத்து வாங்கினார்.

    ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் நகரில் விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன.  இதில் இன்று நடந்த போட்டி ஒன்றில், தமிழகம் மற்றும் கர்நாடக அணிகள் விளையாடின.

    இந்த போட்டியில், டாஸ் வென்ற கர்நாடக அணி பந்து வீச்சு தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து விளையாடிய தமிழக அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் பாபா 13 ரன்களில் வெளியேறினார்.  மற்றொரு வீரரான ஜெகதீசன் சதம் விளாசினார்.  அவர் 102 ரன்கள் (101 பந்துகள், 9 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்து உள்ளார்.

    அணியில் ரவிஸ்ரீனிவாசன் (61), தினேஷ் கார்த்திக் (44), இந்திரஜித் (31), விஜய் சங்கர் (3), வாஷிங்டன் சுந்தர் (0), சித்தார்த் (0) ரன்களில் வெளியேறினர்.  மற்றொரு தமிழக வீரரான ஷாருக் கான் 79 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.  ரகுபதி 1 ரன்னுடன் ஆட்டமிழக்கவில்லை.  50 ஓவர் முடிவில், 8 விக்கெட் இழப்புக்கு தமிழக அணி 354 ரன்கள் சேர்த்து உள்ளது.

    முதலில் பாபா அபராஜித் 13 ரன்களில் வெளியேற நாராயண் ஜெகதீசன் ஒரு முனையில் நங்கூரம் பாய்ச்ச ரவி ஸ்ரீநிவாசன் சாய் கிஷோர் 71 பந்துகளில் 4 பவுண்டரி 3 சிக்சர்கள் என்று 61 ரன்கள் அடிக்க இருவரும் 2வது விக்கெட்டுக்காக 147 ரன்களைச் சேர்த்தனர். ஜெகதீசன், தினேஷ் கார்த்திக் (44) சேர்ந்து மேலும் 58 ரன்களைச் சேர்த்தனர்.

    விஜய் சங்கர் 3 ரன்களில் துபே பந்தில் ஆட்டமிழந்த போது 40.1 ஓவர்களில் தமிழ்நாடு அணி 252/5 என்று இருந்தது. பிறகு பாபா இந்திரஜித்  24 பந்துகள்ல் 31 ரன்களைச் சேர்க்க இன்னொரு முனையில் சரவெடி ஷாருக்கான் 7 பவுண்டரி 6 சிக்சர்களுடன் 39 பந்தில் 79 ரன்கள் விளாசித்தள்ளினார், இதில் ஒரு பெரிய விஷயம் என்னவெனில் 46 ஓவர்களில் தமிழ்நாடு அணி 290/8 என்று இருந்தது.

    9-வது விக்கெட்டுக்காக ஷாரூக்கானுடன் ஜோடி சேர்ந்த ரகுபதி சிலம்பரசன் 1 ரன்னை 2 பந்துகளில் எடுக்க, மீதி 22 பந்துகளை சந்தித்த ஷாருக்கான் 63 ரன்களை வெளுத்து வாங்கினார். கடைசியில் 39 பந்தில் 79 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக ஷாருக்கான் திகழ தமிழ்நாடு அணி ஸ்கோர் 354/8 ஆக உயர்ந்தது.

    இலக்கை விரட்டிவரும் கர்நாடகா அணி 10 ஓவர்களில் 55 ரன்களையே எடுத்து 1 விக்கெட்டை இழந்திருப்பதால் பெரிய இலக்கை எடுக்க திண்டாடும் என்றே கூற வேண்டும் எனவே அரையிறுதிக்கு தமிழ்நாடு ஏறக்குறைய தகுதி பெற்றுவிட்டது.

    First published: