• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Usain Bolt : இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான உசேன் போல்ட் - தந்தையர் தினத்தில் சர்பிரைஸ்

Usain Bolt : இரட்டை குழந்தைகளுக்கு தந்தையான உசேன் போல்ட் - தந்தையர் தினத்தில் சர்பிரைஸ்

உசேன் போல்

உசேன் போல்

இணையத்தில் கவனம் ஈர்த்துள்ள உசேன் போல்டின் குடும்ப புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

  • Share this:
உலகின் நட்சத்திர தடகள வீரராக இருக்கும் உசேன் போல்ட், அண்மையில் பிறந்த தன் இரட்டைக் குழந்தைகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

தடகளத்தில் உலகின் ஜாம்பாவனாக திகழ்ந்த உசேன் போல்ட், பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கப் பதங்கங்களையும், பரிசுகளையும் வாரிக் குவித்துள்ளார். தடகளத்தில் அவர் படைத்துள்ள உலக சாதனைகள் அவரே முறியடித்தால் மட்டுமே உண்டு என்ற அளவுக்கு தன்னுடைய முத்திரையை உலக அரங்கில் ஆணித்தரமாக பதித்துள்ளார்.

ஜமைக்காவைச் சேர்ந்த இவருக்கு உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே உண்டு. தடகள வீரர் ஒருவருக்கு இருக்கும் இவ்வளவு ரசிகர்கள் இருப்பது இவருக்கு மட்டுமே என்றுகூட கூறலாம். அந்தளவுக்கு புகழ் வெளிச்சம் பெற்றுள்ள அவர், அதனை ஓரிரு நாட்களில் அடைந்துவிடவில்லை.

ALSO READ | 95 வயதில் படு சுறுசுறுப்பாக பர்ஃபி விற்று தொழிலதிபரான பாட்டி - இன்ஸ்பிரேஷனல் ஸ்டோரி!

தொடர்ச்சியான விடா முயற்சி மற்றும் கடின உழைப்பால் வெற்றியை வசமாக்கிக்கொண்டே இருந்தார். 2008, 2012, 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் தொடர்ச்சியாக 8 தங்கப் பதக்கங்களை வெற்று பெற்று வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மிக வேகமாக இலக்கை அடைவதில் 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயங்களில் குறுகிய நேரத்தில் ஓடி சாதனை படைத்துள்ள அவர், ஒரே நேரத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் டபுள் போட்டிகளில் தொடர்ச்சியாக மூன்று ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று தங்கப்பதக்கம் பெற்றவரும் இவரே.

ALSO READ | 'ஆண்களுக்கு மகள்கள் தான் தேவை' - டுவைன் ஜான்சன் சொல்லும் முக்கிய காரணம்!

இதுபோன்ற எண்ணற்ற சாதனைகளை தன்வசம் வைத்துள்ள உசேன் போல்ட் 2017 ஆம் ஆண்டு தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று கால்பந்து உள்ளிட்ட பிற போட்டிகளில் கவனம் செலுத்தினார். 2019 ஆம் ஆண்டுடன் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்த அவர், தற்போது குடும்பத்தினருடன் போதுமான நேரத்தை செலவிட்டு வருகிறார்.

  
View this post on Instagram

 

A post shared by Usain St.Leo Bolt (@usainbolt)


 

அண்மையில், தந்தையர் தினத்தன்று தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார். அந்தப் புகைப்படத்தில் அவர், அவருடைய காதலி பென்னட் மற்றும் மகள் ஒலிம்பியா லைட்டனிங் போல்ட் ஆகியோர் உள்ளனர்.

ALSO READ | ஏலத்தில் ரூ.19 லட்சத்திற்கு விற்கப்பட்டஆஸ்திரேலியன் கெல்பி நாய் ..

மேலும், போட்டுக்கு புதிதாக பிறந்த இரட்டை ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர். எப்போது குழந்தை பிறந்தது என்று அவர் தெரிவிக்கவில்லை என்றாலும், தன் மகன்களுக்கு பெயர் இட்டதை மகிழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தண்டர்போல்ட், செயிண்ட் லியோ போல்ட் என பெயரிட்டுள்ளார். மனைவி பென்னட் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தந்தையர் தினத்துக்கு போல்டுக்கு வாழ்த்துச் கூறியுள்ளார். அதில், தங்களுடைய குழந்தைகளுக்கு நீங்கள் எப்போதும் ஹீரோ, ராக்ஸ்டார் என புகழ்ந்துள்ளார்.

ALSO READ | 'அண்ணாமலை முதல் ஆலியா பட் வரை...தெறிக்கவிடும் விஜய் ரசிகர்கள்' - இன்றைய ட்விட்டர் ட்ரெண்டிங்

இந்த உலகில் எப்போதும் உங்களை விரும்பிக் கொண்டே இருப்போம் எனவும் பென்னட் கூறியுள்ளார். இணையத்தில் கவனம் ஈர்த்துள்ள உசேன் போல்டின் குடும்ப புகைப்படத்துக்கு நெட்டிசன்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கியூட் புகைப்படம் என்றும், எப்போதும் இதேபோல் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றும் அன்பு வார்த்தைகளால் போல்டை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: