பார்வையாளர்கள் இல்லாமல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி

கோப்புப் படம்

கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என அந்நாட்டு கவர்னர் அறிவித்துள்ளார்.

  • Share this:
உலக முழுவதும் கொரோனோ வைரஸ் அச்சுறுத்தலால் கடந்த மார்ச் மாதம் முதல் அனைத்து விதமான சர்வதேச டென்னிஸ் போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன. பிரான்ஸில் களிமண் தரையில் நடைபெறும்  பிரென்ஞ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

இங்கிலாந்தில் நடைபெறும் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ரத்து செய்யப்பட்டது. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு விம்பிள்டன் போட்டி கொரோனோ வைரஸால் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடப்பாண்டு ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. அமெரிக்காவில் கொரோனோ வைரஸ் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் நிலையில் பாதுகாப்பாக ரசிகர்கள் இன்றி போட்டியை நடத்த அந்நாட்டு டென்னிஸ் சங்கம் முடிவு செய்தது.

இதற்காக நியூயார்க் ஆளுநரிடம் அனுமதி கோரியிருந்தனர்.  ஆளுநர் Andrew Cuomo அனுமதி வழங்கியதால் திட்டமிட்டபடி ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 13 வரை ரசிகர்கள் இல்லாமல் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

வீரர்களுக்கு என பிரத்யேகமாக ஹோட்டல் அறைகள், பயணங்கள், பயிற்சிகள் உள்ளிட்டவற்றில் அக்கரை செலுத்தி அந்நாட்டு டென்னிஸ் சங்கம் தீவிரம் காட்டு வருகிறது. வீரர்களின் பாதுகாப்பையும், நடுவர்கள், ஊழியர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்தால் மட்டுமே விளையாட முடியும் என ஜோகோவிசி, நடால் உள்ளிட்ட வீரர்கள் முடிவு செய்துள்ளனர்.

இதற்கு முன்னாள் சாம்பியன் ஆண்டி முர்ரே உள்ளிட்ட சில வீரர்கள் எதிர்ப்பும் தெருவித்து வருகின்றனர். அமெரிக்காவில் தீவிரமாக பரவி வரும் கொரோனோ வைரஸ் அச்சுருத்தல், நிற வெறிக்கு எதிரான போராட்டம் என நாடே அசாதாரணமான சூழலில் சிக்கித்தவிக்கும்  இந்த நேரத்திலும் போட்டியை நடத்த அந்நாட்டு டென்னிஸ் சங்கம் தீவிரம் காட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க...

Horoscope Today: உங்கள் ராசிக்கான இன்றைய பலன்கள்...! (ஜூன் 17, 2020)

ஒரு முறை கொரோனா பாதித்தவருக்கு இரண்டாவது முறையும் தொற்று ஏற்படுமா?

 
Published by:Vaijayanthi S
First published: