ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை - ஓய்வை அறிவித்தார் 'தி அண்டர்டேக்கர்'

Undertaker Retires | 55 வயதான அண்டர்டேக்கர் பல வருடங்களாக WWE-ல் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஓய்வு அறிவித்துள்ளார்.

ரிங்கிற்குள் திரும்பி வர விருப்பமில்லை - ஓய்வை அறிவித்தார் 'தி அண்டர்டேக்கர்'
அண்டர்டேக்கர்
  • Share this:
WWE எனும் மல்யுத்த போட்டியில் 30 ஆண்டுகளாக பங்கேற்று வந்த 'தி அண்டர்டேக்கர்' தனது ஓய்வை அறிவித்தார்.

அரங்கம் முழுவதும் இருட்டு, மிரளவைக்கும் மணியின் சத்தம், கசியும் புகைக்கு நடுவே 6 அடி உயரத்தில் அசுரன். இப்படி பல பில்டப்புகளுடன் ரசிகர்கள் மத்தியில் தோன்றி எதிரிகளுக்கு பீதியை கிளப்புபவர் 'தி அண்டர்டேக்கர்'.

WWE போட்டிகளில் 30 ஆண்டுகளாக பங்கேற்கும் இவர் சமீபத்தில் “தி லாஸ்ட் ரைடு“ தொடரின் கடைசி பகுதியில் மீண்டும் ரிங்கிற்குள் நான் திரும்ப விருப்பமில்லை என்று கூறி தனது ஓய்வை அறிவித்துள்ளார்.


WWE போட்டியில் ரெஸ்ஸில்மேனியா எனும் பிரமாண்ட மல்யுத்த போட்டியில் இவர் ஒரு முறை கூட தோற்றதில்லை. ரெஸ்ஸில்மேனியாவின் 36-வது தொடரில் இவர் கடைசியாக ஏஜே ஸ்டைல்ஸ் உடன் மோதி வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கு பின் தனது பைக்கில் பிரியாவிடை பெற்றார். அப்போதே அவர் ஒய்வு பெறுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர்.

WWE மல்யுத்த போட்டியில் தனது 30 ஆண்டுகால நினைவை “தி லாஸ்ட் ரைடு“ என்ற தொடரின் மூலம் பகிர்ந்து வந்தார். அதன் கடைசி பகுதியில் தான் மீண்டும் போட்டிக்கு திரும்பபோவதில்லை என்று கூறி தனது ஓய்வை அறிவித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

WWE-ல் அண்டர்டேக்கருக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. சவப்பெட்டியில் அவரை அடக்கம் செய்வது போல் காட்சிகள் இடம்பெற்றிருக்கும், பின் மீண்டும் எதிரிகளுடன் சண்டையிட ரிங்கிற்குள் வருவார். இதுப்போன்ற காட்சி அமைப்புகளால் அவருக்கு டெட்மேன் என்ற பெயரும் உண்டு.அண்டர்டேக்கருக்கு 7 உயிர் என்று சொல்லி திரிந்தவர்களும் பலர் உண்டு. இந்திய வீரர் கிரேட் காளி உள்ளிட்ட பலம்வாய்ந்தவர்களுடன் அண்டர்டேக்கர் மோதி உள்ளார். இவரது இயற்பெயர் மார்க் வில்லியம் கால்வே. இவர் ஒரிரு ஹாலிவுட் படங்களிலும் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடதக்கது.
First published: June 22, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading