Home /News /sports /

#AsianCup: கால்பந்து வீரர்கள் மீது காலணி வீச்சு! - வீடியோ

#AsianCup: கால்பந்து வீரர்கள் மீது காலணி வீச்சு! - வீடியோ

கத்தார் கால்பந்து அணி வீரர்கள் மீது காலணி வீச்சு. (Twitter)

கத்தார் கால்பந்து அணி வீரர்கள் மீது காலணி வீச்சு. (Twitter)

#AFC #AsianCup: Shoes thrown On Qatar players | கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே இருந்தது. #QatarvsUAE

  • News18
  • Last Updated :
    ஆசியக் கோப்பை அரையிறுதி போட்டியில் கால்பந்து வீரர்கள் மீது காலணிகள் வீசப்பட்டதால் மைதானத்தில் பரப்பு ஏற்பட்டது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் 17-வது ஆசியக் கோப்பை கால்பந்து தொடர் (ஏ.எஃப்.சி) நடைபெற்று வருகிறது. மொத்தம் 24 அணிகள் 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் இடம்பெற்றன. குரூப் சுற்றுப் போட்டிகள் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிரண்டு இடங்களைப் பிடித்த அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.

    Qatar Vs UAE, கத்தார், ஐக்கிய அரபு
    கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அணிகள் மோதல். (Twitter)


    நாக் அவுட் போட்டிகளின் முடிவில், ஈரான், ஜப்பான், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. முதல் அரையிறுதியில் ஜப்பான் அணி, ஈரான் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இதனை அடுத்து, அபுதாபியில் நடந்த 2-வது அரையிறுதி போட்டியில், கத்தார் அணியும், ஐக்கிய அரபு அமீரக அணியும் பலப்பரீட்சை நடத்தின. போட்டியின் தொடக்கம் முதலே ஆக்ரோசமாக விளையாடிய கத்தார் அணி 4-0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    Qatar Football Team, கத்தார் கால்பந்து அணி
    கோல் அடித்த மகிழ்ச்சியில் கத்தார் வீரர்கள். (Twitter)


    போட்டியில் கத்தார் அணி கோல் அடிக்கும்போது ஆத்திரம் அடைந்த ஐக்கிய அரபு அமீரக அணியின் ரசிகர்கள் காலணிகளை மைதானத்துக்குள் தூக்கி வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது.



    இதனால், இரண்டு முறை ஆட்டம் பாதிக்கப்பட்டது. அத்துடன், கத்தாருக்கு எதிராக ஐக்கிய அரபு அமீரக ரசிகர்கள் கோஷங்கள் எழுப்பியதால் ஆட்டம் முழுவதும் பரபரப்பாகவே இருந்தது.

    #ICCT20WorldCup2020: இந்தியா vs பாகிஸ்தான் போட்டி எப்போது?

    Also Watch...

    Published by:Murugesan L
    First published:

    Tags: Football

    அடுத்த செய்தி