Home /News /sports /

U19 ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்கு நிர்ணயத்தது இந்தியா

U19 ஆசிய கோப்பை : பாகிஸ்தானுக்கு 238 ரன்கள் இலக்கு நிர்ணயத்தது இந்தியா

U19 ஆசியக்கோப்பை

U19 ஆசியக்கோப்பை

U19 ஆசிய கோப்பை குரூப் போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற இந்திய அணி 238 ரன்கள் இலக்கு நிர்ணயத்து உள்ளது.

  • 1 minute read
  • Last Updated :
    U19 ஆசிய கோப்பை தொடர் கடந்த 23-ம் தேதி ஐக்கிய அமீரகத்தில் தொடங்கியது. துபாயில் இன்று நடைபெறும் போட்டியில் குரூப் ஏ போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக அங்கிரிஷ் ரகுவன்ஷி மற்றும் ஹர்னூர் சிங் களமிறங்கினர். அங்கிரிஷ் ரகுவன்ஷி ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி அதிர்ச்சியளித்தார். அடுத்து களமிறங்கிய ஷேக் ரஷீத் 6 ரன்களிலும், கேப்டன் யாஷ் துல் டக் அவுட்டாகியும் பெவிலியன் திரும்பினர்.

    இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறினாலும் மற்றொரு தொடக்க வீரர் ஹர்னூர் சிங் நிதானமாக விளைாயாடி 46 ரன்கள் குவித்தார். பின்வரிசையில் இறங்கிய விக்கெட் கீப்பர் ஆராத்யா யாதவ் சிறப்பாக விளையாடி 50 ரன்கள் விளாசினார். இறுதியாக இந்திய அணி 49 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 237 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

    பாகிஸ்தான் அணி சார்பில் வேகப்பந்து வீச்சாளர் ஜீஷான் ஜமீர் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 238 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாடி வருகிறது. இரு அணிகளும் முதல் போட்டியில் வெற்றி பெற்றுள்ளதால் இந்த போட்டியில் வெற்றி பெரும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பது குறிப்பிடதக்கது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Asia cup

    அடுத்த செய்தி