• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • பாராலிம்பிக் போட்டி : டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பவினா படேல்

பாராலிம்பிக் போட்டி : டேபிள் டென்னிஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் பவினா படேல்

பவினா படேல்

பவினா படேல்

நான் என்னுடைய 100 சதவிகிதத்தை கொடுத்து விளையாடுகிறேன். மனதளவில் நான் இறுதிப்போட்டிக்கு தயாராக உள்ளேன்.

  • Share this:
    டோக்கியோவில் நடந்து வரும் பாராலிம்பிக் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவு  டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.

    ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன.  மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு  டேபிள் டென்னிஸ் அரையிறுதி போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல்  சீன வீராங்கனை ஜாங்க் மியாவை எதிர்க்கொண்டார்.

    விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியாவின் பவினா படேல் 3-2 என்ற புள்ளி கணக்கில் சீன வீராங்கனை ஜாங்க் மியாவை தோற்கடித்தார். இந்த வெற்றியின் மூலம் பவினா படேல் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.போட்டிக்கு பின்னர் பேசிய பவினா படேல்,” நான் என்னுடைய 100 சதவிகிதத்தை கொடுத்து விளையாடுகிறேன். மனதளவில் நான் இறுதிப்போட்டிக்கு தயாராக உள்ளேன்” என்றார்.



     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இதுகுறித்து அவரது தந்தை பேசுகையில், நான் இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் மகள் நிச்சயமாக தங்கம் வெல்லப்போகிறாள். அவர் கடந்த 20 ஆண்டுகளாக டேபிள் டென்னிஸ் விளையாடி வருகிறார்” என்றார்.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: