டோக்யோ பாராலிம்பிக்கில் உயரம் தாண்டுல் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். ஏற்கனவே, பாரா ஒலிம்பிக் டேபிள் டென்னிஸ் போட்டியில் பவினா வெள்ளி வென்ற நிலையில், இந்தியாவுக்கு மேலும் ஒரு வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16வது பாராலிம்பிக் போட்டிகள் நடந்து வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இதில், இன்று நடைபெற்ற டேபிள் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனை பவினா பென் படேல் வெள்ளிப்பதக்கம் வென்று இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று கொடுத்தார்.
இந்நிலையில்,டோக்கியோவில் நடைபெற்ற பாராலிம்பிக் உயரம் தாண்டுதல் டி 47 இறுதிப் போட்டியில் இந்திய வீரர் நிஷாத் குமார் 2.06 மீ தாண்டி வெள்ளி வென்று சாதனைப் புரிந்துள்ளார். இதன்மூலம், ஆசிய சாதனையை அவர் படைத்துள்ளார். மேலும்,இது பாராலிம்பிக்கில் இந்தியா பெற்ற இரண்டாவது பதக்கம் ஆகும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில்
நியூஸ்18 தமிழ் இணையதளத்தை
இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்..
செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.