டோக்கியோ ஒலிம்பிக்: மகளிர் குத்துச் சண்டைப் போட்டியில் மேரி கோம் அதிர்ச்சி தோல்வி

இந்திய வீராங்கனை மேரி கோம் அதிர்ச்சி தோல்வி!

டோக்கியோ ஒலிம்பிக்கில் உறுதியாக பதக்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட மேரி கோம், காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வியைத் தழுவினார்.

 • Share this:
  டோக்கியோவில் நடந்துவரும் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் இதுவரையில் பெண்களுக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனைகள் பூஜா ராணி, லவ்லினா ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

  இந்நிலையில், மகளிர் குத்துச்சண்டை 51 கிலோ எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய நட்சத்திர வீராங்கனை மேரி கோம் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

  Also read: ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி : அர்ஜென்டினாவை வீழ்த்தியது இந்தியா.. காலிறுதி வாய்ப்பு உறுதி

  மகளிருக்கான குத்துச்சண்டைப் போட்டிகள் இன்று நடந்தன. இதில் 51 கிலோவுக்கான எடைப் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை மேரி கோமும், கொலம்பிய வீராங்கனை இன்கிரிட் வெலன்சியாவும் மோதினர்.

  இதில் 2 -3 என்ற கணக்கில் இந்தியாவின் மேரி கோம் போராடித் தோற்றார். இந்தத் தோல்வியின் மூலம் மகளிர் பிரிவு குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கான பதக்க வாய்ப்பு பறிபோனது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  மேரி கோமை வென்ற வெலன்சியா 2016 ரியோ ஒலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம் வென்றவர். 2012-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் மேரி கோம் வெண்கலம் வென்றார். மேரிகோம் மகளிர் குத்துச்சண்டை போட்டியில் 6 முறை உலக சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  Published by:Esakki Raja
  First published: