ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ரூ.6 கோடி பரிசு: கிரேட் 1 அரசு வேலை - ஹரியானா அரசு அறிவிப்பு

நீரஜ் சோப்ரா

ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது.

 • Share this:
  டோக்யோ ஒலிம்பிக் போட்டித் தொடரின் ஆடவர் ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றுப் போட்டியில் அசத்திய இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் தூரத்துக்கு ஈட்டி வீசி இந்தியாவுக்காக முதல் தங்கப் பதக்கத்தை வென்று புதிய சரித்திரத்தை இன்று படைத்திருக்கிறார்.

  சுதந்திரத்துக்கு பின்னர் தடகளத்தில் இந்தியர் ஒருவர் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். அதே போல தனி நபர் பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை நீரஜ் சோப்ரா படைத்திருக்கிறார். முன்னதாக அபினவ் பிந்த்ரா 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் துப்பாக்கிச்சுடுதல் பிரிவில் தங்கம் வென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  இறுதிச் சுற்றில் ஜெர்மனி, பெலாரஸ், பாகிஸ்தான் நாட்டின் வீரர்கள் நீரஜ் சோப்ராவுக்கு கடுமையான சவால் அளித்தனர். நீரஜ் சோப்ரா முதல் சுற்றில் 87.03 மீட்டரும், இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டரும், மூன்றாம் சுற்றில் 76.79 மீட்டரும் ஈட்டி வீசினார். இறுதிப் போட்டியில் முதல் சுற்றில் இருந்தே நீரஜ் சோப்ரா முன்னிலை பெற்றிருந்தார். இரண்டாம் சுற்றில் 87.58 மீட்டர் வீசியதன் மூதல் முதல் சுற்றில் பெற்றிருந்த முன்னிலையை அவர் மேலும் அதிகப்படுத்தினார். நீரஜ் சோப்ராவுக்கு செக் குடியரசின் Vitezslav Vesely (85.44மீ) , ஜெரிமனியின் Julian Weber (85.30 மீ) ஆகியோர் சவால் அளித்தனர். பாகிஸ்தானின் நதீம் அதிகபட்சமாக 84.62 மீ வீசினார்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

  நீரஜ் சோப்ரா தங்கப் பதக்கம் வென்றதன் மூலம் பதக்கப்பட்டியலில் 66வது இடத்தில் இருந்த இந்தியா 46வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. தங்கப் பதக்கம் வென்ற நீரஜ் சோப்ராவுக்கு ஹரியானா மாநில அரசு 6 கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்துள்ளது. மேலும், மாநில அரசின் கிரேட் 1 அரசு வேலை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. பல்வேறு தரப்பினரும் நீரஜ் சோப்ராவுக்கு வாழ்த்து தெரிவித்துவருகின்றனர்.
  Published by:Karthick S
  First published: