• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒலிம்பிக் கோல்ஃப் : பதக்க வாய்ப்பை தவறவிட்டாலும் சாதனை படைத்த அதிதி அசோக்

ஒலிம்பிக் கோல்ஃப் : பதக்க வாய்ப்பை தவறவிட்டாலும் சாதனை படைத்த அதிதி அசோக்

அதிதி அசோக்

அதிதி அசோக்

ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியில் இந்தியாவின் அதிதி அசோக் 4-வது இடம்பிடித்து பதக்க வாய்ப்பை தவறவிட்டார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக்கில் கடந்த 4-ம் தேதி தொடங்கிய மகளிருக்கான கோல்ஃப் போட்டிகள் 4 சுற்றுகளாக நடைபெற்றன. 3-ம் நாள் முடிவில் அமெரிக்காவின் நெல்லி கொர்டா 198 புள்ளிகளுடன் முதலிடத்திலும், இந்தியாவின் அதிதி அசோக் 201 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் இருந்தனர். ஜப்பான், நியூசிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் டென்மார்க் வீராங்கனைகள் 203 புள்ளிகளுடன் 3-வது இடத்திலும் இருந்தனர்.

    4-வது மற்றும் கடைசி நாளான இன்று வீராங்கனைகள் அனைவரும் தங்களது முழு திறனையும் வெளிப்படுத்தியால், ஒவ்வொரு குழி நிறைவுபெறும் போதும் முடிவுகள் மாறிய வண்ணம் இருந்தன. குறிப்பாக ஜப்பானின் இனாமி மற்றும் நியூசிலாந்தின் லிடியா கோ அபாரமாக விளையாடி குறைவான வாய்ப்புகளில் குழியில் பந்துகளை தள்ளி அசத்தினர். 16 குழிகள் வரை முதல் 3 இடங்களுக்குள் இருந்த அதிதி, 17-வது குழியில் 4-வது இடத்திற்கு பின்தங்கினார்.

    Also Read : ‘என் கடினமான காலங்களில் உதவியவர்கள்’ - 150 லாரி ஓட்டுநர்களுக்கு விருந்து படைத்த மீரா பாய் சானு

    கடைசி குழியையும் அவர் PAR செய்ததால், 269 புள்ளிகளுடன் 4-வது இடம்பிடித்து பதக்கத்தை தவறவிட்டார். இருப்பினும் ஒலிம்பிக் கோல்ஃப் போட்டியை முதல் 5 இடங்களுக்குள் நிறைவு செய்த முதல் இந்தியர் என்ற சாதனைக்கு அதிதி சொந்தக்காரர் ஆகியுள்ளார். 267 புள்ளிகள் பெற்ற அமெரிக்காவின் நெல்லி கொர்டா தங்கப்பதக்கத்தை வென்றார்.

    ஜப்பான் மற்றும் நியூசிலாந்து வீராங்கனைகள் ஒரே புள்ளிகளை பெற்று 2-வது இடத்தில் இருந்தனர். இதனால் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கத்தை தீர்மானிக்க போட்டி நடத்தப்பட்டது. இதில் ஜப்பானின் இனாமி வென்று வெள்ளிப் பதக்கத்தை வசப்படுத்தினார். லிடியா கோவிற்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vijay R
    First published: