• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • ஒலிம்பிக் லைவில் மண்டியிட்டு ப்ரபோஸ் செய்த கோச்.. துள்ளிக்குதித்த வீராங்கனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

ஒலிம்பிக் லைவில் மண்டியிட்டு ப்ரபோஸ் செய்த கோச்.. துள்ளிக்குதித்த வீராங்கனை - இணையத்தில் வைரலாகும் வீடியோ

வீராங்கனைக்கு ப்ரபோஸ் செய்த பயிற்சியாளர்

வீராங்கனைக்கு ப்ரபோஸ் செய்த பயிற்சியாளர்

2011-ம் ஆண்டு பாரிஸில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது லூகாஸ் இதே ஸ்டண்டை செய்துள்ளார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு வீராங்கனைக்கு அவரது பயிற்சியாளர் ப்ரோபோஸ் செய்த காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

    அர்ஜெண்டினாவை சேர்ந்த 36 வயதான மரியா பெலன் பெரோஸ் மாரிஸ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வாள்வீச்சு விளையாட்டில் பங்கேற்றார். ஹங்கேரி வீராங்கணை அன்னாவிடம் 12-15 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியுற்று வெளியேறினார். தோல்விக்கு பின்னர் ஊடகத்திடம் பேட்டி கொடுத்தார். இந்தப்போட்டியில் தான் செய்த தவறு தோற்றதற்கான காரணக்களை செய்தியாளர்களிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

    அப்போது அவருக்கு பின்னால் இருந்த அவரது பயிற்சியாளர் லூகாஸ் ( Lucas Guillermo saucedo) ‘நீ என்னை திருமணம் செய்துகொள்கிறாயா’ என ஒரு பேப்பரில் எழுதி அவருக்கு பின்னால் இருந்து காட்டினார். செய்தியாளர்கள் சிக்னல் கொடுக்க மரியா பெலன் திரும்பி பார்த்தார். லூகாஸ் மண்டியிட்டு தன் காதலை ப்ரோபோஸ் செய்தார். மரியா பெலன் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து சம்மதம் தெரிவித்துள்ளார்.

     



    17 வருட காதலர்கள் இப்போது இல்வாழ்க்கையில் இணையப்போகிறார்கள். வாள் வீச்சு பயிற்சியின் போது இவர்களுக்குள் அறிமுகம் ஏற்பட்டது. நாளடைவில் நட்பு காதலாக மாறியுள்ளது. இதில் ஒரு சுவாரஸ்மான விஷயம் என்றால் 2011-ம் ஆண்டு பாரிஸில் நடந்த வேர்ல்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் போது நம்ம லூகாஸ் இதே ஸ்டண்டை செய்துள்ளார். அப்போது அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை. என்ன காமெடி பண்றீங்களான்னு மரியா ரிஜெக்ட் செய்துவிட்டு போய்விட்டார். 11 வருடம் கழித்து மீண்டும் அதே ஸ்டேண்ட் இப்ப அவருக்கு அதிர்ஷ்ட காத்து வீசியிருக்க. மரியா ஓகே சொல்லிட்டாங்க.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த முறை லூகாஸ் ப்ரபோஸ் செய்யும் போது கூட மரியாவை பார்த்து ஒகே சொல்லிடு எல்லாரும் பாக்குறாங்கன்னு கெஞ்சலாக கேட்டார். இதுகுறித்து பேசியுள்ள மரியா, “ என்னை இண்டர்வியூ செய்தவர்கள் திரும்பி பார்க்க சொன்னார்கள். நான் பார்த்தபோது லூகாஸ் கடிதம் வைத்துக்கொண்டிருந்தார். நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். நாங்க இப்போ ரொம்ப மகிழ்ச்சியா இருக்கோம். எங்களுக்குள் சண்டை நடக்கும் நாங்கள் ஒன்றாக இருக்கும் நேரத்தை மகிழ்வுடன் செலவிடுவோம். நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மிகவும் நேசிக்கிறோம். நாங்கள் வாழ்க்கையை ஒன்றாக வாழ விரும்புகிறோம்.” என்றார்.

    லூகாஸ் பேசுகையில், ”நான் அவளை மிகவும் நேசிக்கிறேன். அவள் இந்த ஆட்டத்தை தோற்றதும் மிகவும் கவலையுடன் காணப்பட்டாள்.என்னுடைய புரபோசல் அவளுடைய மனதை மாற்றும் என நினைத்தேன். அந்த நொடியில்தான் பேப்பரில் எழுதினேன்.அவள் வெற்றி பெறுகிறாளோ இல்லையோ நான் இந்தத் தருணத்திற்காக காத்திருந்தேன்” எனக் கூறியுள்ளார்.

     



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Ramprasath H
    First published: