• HOME
  • »
  • NEWS
  • »
  • sports
  • »
  • Tokyo Olympics| 3000மீ ஸ்டீப்பிள் சேஸ்: அவினாஷ் சேபிள் புதிய சாதனை

Tokyo Olympics| 3000மீ ஸ்டீப்பிள் சேஸ்: அவினாஷ் சேபிள் புதிய சாதனை

ஸ்டீப்பிள் சேஸ், அவினாஷ் சேபிள்.

ஸ்டீப்பிள் சேஸ், அவினாஷ் சேபிள்.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 3000 மீ ஸ்டீப்பிள் சேஸ் ஆடவர் பிரிவு தடகளப்போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் 7ம் இடத்தில் முடிந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினாலும் புதிய தேசிய சாதனை படைத்தார்.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 3000 மீ ஸ்டீப்பிள் சேஸ் ஆடவர் பிரிவு தடகளப்போட்டியில் இந்திய வீரர் அவினாஷ் சேபிள் 7ம் இடத்தில் முடிந்து துரதிர்ஷ்டவசமாக வெளியேறினாலும் புதிய தேசிய சாதனை படைத்தார்.

    அவினாஷ் சேபிள் 8:18:12 என்ற நேரத்தில் ஓடி தன் முந்தைய தேசிய சாதனையையே முறியடித்தார். இதற்கு முன்பு அவர் 8 நிமிடங்கள் 20:20 விநாடிகளில் இலக்கை எட்டி இதே தேசிய சாதனையை வைத்திருந்தார், இன்று அதை முறியடித்தார், ஆனால் ஒலிம்பிக்கில் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியாமல் வெளியேறினார்.

    26 வயது அவினாஷ் சேபிள் இந்திய ராணுவத்தில் பணியாற்றுபவர். 3000 மீ ஸ்டீப்பிள் சேசில் நன்றாகத் தொடங்கி முடிவில் பின்னடைந்தார். மொத்தமாக 13வது அதிவேக நேரத்தில் இருந்த அவினாஷ், டாப்16-ல் தகுதி பெறும் வாய்ப்பை சற்றே நழுவ விட்டார்.

    இதையும் படிங்க: Tokyo Olympics: வில்வித்தை காலிறுதியில் தீபிகா குமாரி: த்ரில் போட்டியில் ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தினார்

    ஒவ்வொரு ஹீட்டிலும் 3 பேர், 6 அதிவேக ரன்னர்கள் இறுதிச் சுற்றுக்குத் தகுதி பெறுவார்கள்.

    மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்த அவினாஷ் சேபிள் பெடரேஷன் கோப்பையில் இருமுறை தன் சாதனையையே முறியடித்தார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த 3000 மீ ஸ்டீப்பிள் சேஸ் பிரிவில் 37 ஆண்டுகளாக இருந்த சாதனையை 2018-ல் முறியடித்தார் அவினாஷ். கோபால் சைனி என்பவரின் தேசிய சாதனையை முறியடித்தார் அவினாஷ்.

    2012-ல் இந்திய ராணுவத்தில் சேர்ந்த அவினாஷ் சேபிள் மனதில் ஸ்டீப்பிள் சேஸ் என்ற ஒன்று இல்லவே இல்லை என்கிறார் அவர்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Muthukumar
    First published: