Tokyo Olympics 2021 | ஜப்பானில் கோலாகலமாகத் தொடங்கிய ஒலிம்பிக் போட்டிகள்- இந்தியக் கொடியை ஏந்தி வந்தார் மன்பிரீத்சிங்

ஒலிம்பிக் தொடக்கவிழா

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி கோலாகமாகத் தொடங்கியது.

  • Share this:
    உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த 2020ல் ஜப்பான் தலைநகர் டோக்யோவில் நடைபெற வேண்டிய ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா வைரஸ் பெருந்தொற்றால் நடைபெறவில்லை. ஜப்பானிலேயே பலத்த எதிர்ப்புக்குப் பிறகு, இந்திய நேரப்படி இன்று (ஜூலை 23) மாலை 4.30 மணிக்கு ஒலிம்பிக் போட்டிகளுக்கான தொடக்க நிகழ்ச்சிகளுடன் கோலகலமாக ஒலிம்பிக் திருவிழா தொடங்கியது. இன்று தொடங்கும் ஒலிம்பிக் போட்டி ஆகஸ்ட் 8-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. கொரோனா பாதிப்பின் காரணமாக ஒலிம்பிக் வீரர்களுக்கு இதுவரையில் இல்லாத பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

    விழாவின் முக்கிய அம்சமாக போட்டியில் பங்கேற்கும் நாடுகளின் அணியினர் தங்களது தேசியக் கொடியுடன் மிடுக்காக அணிவகுத்து வருகின்றனர்.

    இந்திய அணிக்கு தலைமை தாங்கி தேசிய கொடியை ஏந்தும் கவுரவம் குத்துச்சண்டையில் 6 முறை உலக சாம்பியனான மேரிகோம், ஆண்கள் ஆக்கி அணியின் கேப்டன் மன்பிரீத்சிங் ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

    ஒலிம்பிக்கில் இந்தியக் கொடி ஏந்திவரும் மன்பீரித் சிங்


    இந்தியா தரப்பில் 18 வகையான விளையாட்டுகளில் 125 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். அதில், தமிழ்நாட்டைச் சேரந்த 12 வீரர்கள் அடங்குவார்கள். இதில், துப்பாக்கிச் சுடுதல், மல்யுத்தம், குத்துச் சண்டை, பேட்மிண்டன், ஆண்கள் ஹாக்கி, வில்வித்தை ஆகிய போட்டிகளில் இந்தியா தங்கப்பதக்கம் வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    .200-க்கும் மேற்பட்ட உலக நாடுகள் சார்பாக சுமார் 11,300-க்கும் அதிகமான விளையாட்டு வீரர்கள், 33 விளையாட்டுகளைச் சேர்ந்த 339 நிகழ்வுகளில் போட்டியிட இருக்கின்றனர்.அகதிகள் அணி சார்பாக 12 விளையாட்டுகளில் 29 வீரர்கள் கலந்து கொள்ள உள்ளனர். 2016 பிரேசிலின் ரியோவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்த எண்ணிக்கை 10 ஆக இருந்தது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்த டோக்யோ ஒலிம்பிக் போட்டிகளில் கராத்தே, சர்ஃபிங், ஸ்கேட்போர்டிங், பேஸ்பால் / சாஃப்ட்பால், ஸ்போர்ட் க்ளைம்பிங் ஆகிய ஐந்து விளையாட்டுகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன.
    Published by:Karthick S
    First published: