டோக்கியோ ஒலிம்பிக் : வாள்வீச்சு போட்டியில் தமிழக வீராங்கனை பவானி தேவி முதல் சுற்றில் வெற்றி

சென்னையைச் சேர்ந்த பவானிதேவி

பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர்.

 • Share this:
  டோக்கியோ ஒலிம்பிக் தொடரின் வாள்வீச்சுபோட்டியில் தமிழ வீராங்கனை பவானி தேவி வெற்றியோடு தொடங்கியுள்ளார்.

  டோக்கியோவில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இன்று காலை வாள்வீச்சுக்கான முதல் சுற்றுப் போட்டி நடைபெற்றது. இதில், பெண்களுக்கான தனிநபர் சாப்ரே பிரிவில் தமிழக வீராங்கனை பவானி தேவி, துனிசியாவின் நாடியா பென் அஜிசியும் மோதினர்.

  இதில் பவானி தேவி 15-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.இரண்டாவது சுற்றில் பிரான்ஸ் வீராங்கனையை எதிர்கொள்கிறார் பவானி தேவி.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Vijay R
  First published: