Tokyo Olympics | அர்ஜெண்டினாவிடம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி போராடி தோல்வி

இந்திய பெண்கள் ஹாக்கி அணி

அர்ஜெண்டினா அணியிடம் இந்திய பெண்கள் ஹாக்கி அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது.

  • Share this:
    டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் ஹாக்கி காலிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்திய மகளிர் ஹாக்கி அணி முதல் முறையாக ஒலிம்பிக் அரையிறுதிக்கு முன்னேறி வரலாறு படைத்தது. காலிறுதி ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் இந்திய வீராங்கனை குர்ஜித் கவுர் இந்தியாவின் வெற்றி கோலை அடித்தார். இதுவே அவரது முதல் ஒலிம்பிக் கோலாகவும் அமைந்தது. வரலாற்று வெற்றியில், மகளிர் ஹாக்கி அணியின் ஒலிம்பிக் மைல்கல் வெற்றியில் இதன் மூலம் குர்ஜித் கவுர் தடம்பதித்தார்.

    ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தங்கள் ஹாக்கி வரலாற்றில் மிகப்பெரிய வெற்றியை இந்திய மகளிர் ஹாக்கி அணி பதிவு செய்தது. ஆஸ்திரேலிய மகளிர் ஹாக்கி அணி 3 முறை சாம்பியன்களாகும். ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய அதே உத்வேகம் இன்று அர்ஜெண்டினாவுடன் அரையிறுதிப்போட்டியில் விளையாடியது இந்திய மகளிர் ஹாக்கி அணி. அர்ஜெண்டினா மகளிர் அணி ஜெர்மனியை 3-0 என்று வெளியேற்றி கடும் பலத்துடன் இருந்தது.

    இன்றைய போட்டியின்போது, இந்திய அணியின் குர்ஜித் கவுர் பெனால்டி கார்னர் மூலம் ஒரு கோலை அடித்தார். அதேநேரத்தில் அர்ஜென்டினா வீரர் மரியா நோயல் இரண்டு பெனால்டி வாய்ப்பை கோலாக அடித்தார். அதன்மூலம், அர்ஜென்டினா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    இந்தத் தோல்வியின் மூலம், இந்திய பெண்கள் ஹாக்கி அணியின் இறுதிப் போட்டிக்கான கனவு தகர்ந்தது. இருப்பினும், இந்திய அணிக்கு பதக்கம் வெல்வதற்கான வாய்ப்பு உள்ளது. இங்கிலாந்து அணியுடன் அடுத்து நடக்கவுள்ள போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் வெண்கலப் பதக்கம் வெல்ல முடியும்.
    Published by:Karthick S
    First published: